அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்கள் நீதியை பெற சர்வதேச பொறிமுறை அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையில் கஜேந்திரகுமார்.....


இலங்கை மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையினூடாக மட்டுமே தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நாவில் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமை பேரவையின் 34 ம் அமர்வில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று அங்கு உரையாற்றியிருந் தார், அவரது உரையின் தமிழ் வடி வம் வருமாறு,

ஐநா. மனித உரிமை பேரவை யில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30/1 இலக்க தீர்மானமா னது நிறைவேற்றப்பட்டவேளை, அத்தீர்மானமானது குற்றவியல் விசாரணையொன்றை கோரியிருந்த போதிலும், இலங்கை மீதான ஐநா அலுவலக விசாரணை அறிக்கையில் (இலங்கை தொடர்பில்) குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான குறைபாடுகள் குறித்து ஆழமான கவனத்தை அந்த தீர்மானம்  செலு த்தியிருக்கவில்லை என நாம் அதாவது நிறைவேற்றப்பட்டபோதே எச்சரித்திருந்தோம்.

நடைமுறை அர்த்தத்தில் வெறுமனே ஒரு உள்ளகப் பொறிமுறையாகவே இருக்கப்போகின்ற செயன் முறை, நம்பகத்தன்மையானது எனும் வெளித்தோற்றப்பாட்டைக் காட்டுவதற்காக மட்டும், “வெளிநாட்டு\"  ஈடுபாட்டை, அந்த 30/1 தீர் மானம் கோரிநின்றது என்பதையும் நாம் அப்போதே வெளிப்படுத்தியிருந்தோம்.

அத்தோடு, நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பானது, இலங்கை அரசாங்கத்துக்கு அறவே இல்லை என்பதையும் நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவந்துள்ளோம்.
இந்நிலையில், 2015 மனித உரிமைப்பேரவை தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த ஆகக்குறைந்த கடப்பாடுகளிலிருந்தும் கூட, இலங்கை அரசாங்கமானது, உத்தியோகபூர்வமாகவே, விலகிநிற்கின்றது.

இவ்வாறு, ஐநா மனித உரிமை பேரவைத்தீர்மானத்தின் கடப்பாடுகளிலிருந்து இலங்கையை, வில கியிருக்கச்செய்யும் முயற்சிகள், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரப்படி நிலையில் உச்சத்தில் இருக் கின்ற  ஜனாதிபதியினதும் பிரதம மந்திரியினதும் தலைமையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா தீர்மானத்தின் கடப்பாடுகளை வாய்மொழிமூலமாக நிராகரிப்பது மாத்திரமன்றி, அவற்றில் சொல்லப்பட்ட ஒன்றைத்தானும், இதுவரை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதே இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

இவ்வாறாக, ஐநா தீர்மானத்தை மிகத்தெளிவாக நிராகரித்து, அது தம்மை கட்டுப்படுத்தவே மாட்டாது என ஒரு அரசாங்கம் கூறும் போது, அந்த அரசாங்கத்துக்கு, மேலதிக கால அவகாசம் கொடுப்பதென்பது, பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையில், ஐநா மனித உரிமை பேரவையின் மீதான நம்பகத்தன்மையை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும்.

இந்நிலையில், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது அல்லது ஒரு விசேட தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரிப்பது போன்ற பக்கசார்பற்ற  சர்வதேச நீதிவிசாரணைப்பொறிமுறை ஒன்றினூடாக மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டமுடியும் என நாம் மீளவும் வலியுறுத்திக்கூற விரும்புகிறோம் என கஜேந்திரகுமார் தனது உரையில் குறிப்பிட்டார்.


தமிழர்கள் நீதியை பெற சர்வதேச பொறிமுறை அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையில் கஜேந்திரகுமார்..... Reviewed by Author on March 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.