அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது!


ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இறையாண்மை கொண்ட நாட்டைக் கட்டுப்படுத்தாது என்றும், அவரது அறிக்கையில் உள்ள எல்லா பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர், ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் கடந்த மார்ச் 3ம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

30/1 தீர்மானத்துக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கும் இடையில் பெரிய வித்தியாசம் உள்ளது.ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அரசாங்கம் ஆராய்ந்துள்ளது.

30/1 தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் உள்ளிட்ட, இந்த விவகாரத்தில் கரிசனை கொண்ட தரப்புகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு இதற்கு தகுந்த பதில் அளிக்கப்படும்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பு பணியகம் ஒன்றை இலங்கையில் அமைக்க வேண்டும் என்றும், இராணுவம் ஆக்கிரமித்துள்ள எல்லா தனியார் காணிகளையும் துரிதமாக மீள ஒப்படைக்க வேண்டும் என்றும், கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான சட்டத்தை வரைய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதில் கலப்பு நீதிமன்றப் பரிந்துரை மிகவும் சர்ச்சைக்குரியது.2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானமே இப்போதும் நிறைவேற்றப்படவுள்ளது. அதில் புதிதாக எதுவும் இல்லை.

எமக்கு இரண்டு ஆண்டு காலஅவகாசம் கிடைக்கும். இதில் கலப்பு நீதிமன்றம் குறித்தோ, வெளிநாட்டு நீதிபதிகள் குறித்தோ எதுவும் கூறப்படவில்லை. என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது! Reviewed by Author on March 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.