அண்மைய செய்திகள்

recent
-

அதிக வட்டிக்கு கடன் - வடக்கில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.....


வடமாகாணத்தில் வட்டிக்கு கடன்பெற்று, அதனை மீள செலுத்த முடியாமையால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரி்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் இதுவரை மேற்கொள்ளாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் பயிர்செய்கை நடவடிக்கைகளுக்காக பல்வேறு நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வழங்குகின்றன.

விசேடமாக யுத்தம் காரணமாக கணவர் மற்றும் குடும்பத்தின் ஆண்களை இழந்த பெண்களே இவ்வாறு அதிகமாக தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் கைத்தொழிலுக்காக கடன் பெற்றுக் கொண்ட 32 வயதுடைய 4 பிள்ளைகனின் தாயான பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அவர் முல்லைத்தீவு, விஸ்வமடு பிரதேசத்தில் வாழ்கின்ற நிலையில் சிறிய வர்த்தக வங்கி மற்றும், நிதி நிறுவனங்களில் சிறிய அளவு கடன் பெற்றுள்ளார்.

செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டிப்பணமாக 80 ஆயிரம் ரூபாய் என்ற சிறிய தொகையே காணப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த பெப்ரவரி மாதம் புதுக்குடியிருப்பு பகுதியில் சிவாஜிலிங்கம் சத்தியேந்திரன் என்ற 5 பிள்ளகளின் தந்தை கடன் பணத்தை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

2 லட்சம் ருபாய் கடன் பணத்தை செலுத்த முடியாமலேயே அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இந்த வறுமையான பிரதேசத்தில் மேலும் பல தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடன் செலுத்த முடியாதவர்களை கடன் வழங்கிய அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்ட பல சம்பவங்களும் இவ்வாறு பதிவாகியுள்ளன.

கடந்த காலங்களில் ஆவா குழு என்ற பெயரில் செயற்பட்டவர்களும் நிதி நிறுவனங்களின் பின்னால் உள்ளவர் என தெரியவந்துள்ளது.

கடனை பெற்று மீள அதனை செலுத்தாதவர்களை மிரட்டும் நடவடிக்கைகளுக்காக ஆவா குழு, இந்த நிதி நிறுவனங்களினால் உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிராக பாகுபாட்டினை ஒழிப்பது தொடர்பான குழு, இந்த நிலைமை தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிக வட்டிக்கு கடன் - வடக்கில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..... Reviewed by Author on March 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.