அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாரபுரம் அல்-மினா ம.வி பாடசாலை 1 ஏ.பி.பாடசாலையாக தரமுயர்வு-

1 ஏ.சி பாடசாலையாக காணப்பட்ட மன்னார் தாராபுரம் அல் மினா பாடசாலை 1 ஏ.பி பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் முயட்சியினால் குறித்த பாடசாலை 1 ஏ.பி பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

-குறித்த பாடசாலை தரமுயர்த்தப்பட்ட நிலையில் உயர்தரத்தில் விஞ்ஞான, கணித துறையினை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் வெளி மாவட்டங்களில் சென்று படித்துவரும் சந்தர்ப்பத்தில் தற்போது விஞ்ஞான, கணித துறையும் குறித்த பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

-குறித்த பாடசாலைக்கு நேற்று புதன் கிழமை விஜயம் செய்த மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பாடசாலை தரமுயர்த்தப்பட்டதற்கான சான்றுதலை பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.

மேலும் சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கை தொடர்பாக அவர்களுக்கான பிரத்தியோக வகுப்பினையும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாட்டையும் செய்து வைத்தார்.

இதன் போது அமைச்சர் றிஸாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் என்.எம்.முனவ்பர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


-மன்னார் நிருபர்-
(06-04-2017)

மன்னார் தாரபுரம் அல்-மினா ம.வி பாடசாலை 1 ஏ.பி.பாடசாலையாக தரமுயர்வு- Reviewed by NEWMANNAR on April 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.