அண்மைய செய்திகள்

recent
-

”உயிரிழை” அமைப்பா ….... அதன் உன்னதம் என்ன ???


''உயிரிழை'' அமைப்பின் செயற்பாடு தொடர்பான கேள்விகள் தனிப்பட்ட ஒரு தமிழன் என்ற வகையிலும் வன்னியில் வறுமையின் பிடியில் வாடும் மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டவன் என்ற முறையிலும் எல்லாவற்றிக்கும் மேலாக கேள்வி கேட்பதற்கான அனைத்து தகுதிகளும் கொண்ட ஊடகவியாளன் என்ற முறையிலும் உயிரிழை அமைப்பின் மீதான விமர்சனம் இங்கே முன்வைக்கப்படுகின்றது.

01 உயிரிழை அமைப்பின் நிர்வாக கட்டமைப்பு நிர்வாகிகள், அங்கத்தவர்கள், பணிப்பாளர்கள் என்ற கட்டமைப்பின் சட்டத்துக்கு அமைவாக பதியப்பட்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கான கட்டமைப்பு செயற்பாட்டு ஒழுங்கில் செயற்படுகின்றதா?

02 அவ்வாறு செயற்படுமாயின் பணிப்பாளர் சபை, நிர்வாக சபை, உள்ளக கட்டமைப்பு என்பவை உயிரிழையின் அனைத்து செயற்பாடுகளுக்கும் பொறுப்பு கூறுமா?

03 இதுவரை உயிரிழை நிர்வாகத்தினர் பணிப்பாளர் சபையின் அனுமதியுடனா அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார்கள் ?

04 அவ்வாறாயின் கிழக்கு மாகாணத்திற்கு எத்தனை தடவை சென்றார்கள்? அப்படி சென்றதாயின் அங்கே செல்வதற்கான நோக்கம் என்ன?அதற்கு எவ்வளவு நிதி செலவிடப்பட்டது?
பயன்படுத்தப்பட்ட நிதியானது சரியான முறையில் கையாளப்பட்டதா?

05 தற்போது விளையாட்டு தொடர்பாக உயிரிழை அமைப்பின் ஊடக கருத்து பார்க்க கிடைத்தது உயிரிழை அமைப்புக்கு விளையாட்டு நிருவாகத்தில் உள்ளவர்கள் மட்டும் முடிவெடுத்தால் சரியா?

06 கடந்த ஆண்டு நடந்த நிகழ்வின் கணக்கறிக்கை பொதுக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு அங்கத்தவர் கையொப்பத்துடன் நிதி அனுசரணையாளர்களுக்கு அவ்வருட நிதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா?

07 அனைத்து விபரங்களையும் உயிரிழை முகப்புத்தகத்தில் பதிவிடும் போது ஏன் இதுவரை விளையாட்டு நிகழ்வின் கணக்கறிக்கை வெளியிடவில்லை?

08 கிழக்கு மாகாணத்தில் உள்ள உயிரிழை அமைப்பின் பயனாளிகளின் விளையாட்டு தொடர்பான கருத்து எவ்வாறு உள்ளது என்பதனை பணிப்பாளர் சபையால் கூற முடியுமா?
09 கடந்த ஆண்டு கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஏன் சம்பந்தன் அவர்களிடம் மறைமுகமாக கணக்கறிக்கை கொடுக்கவேண்டும்? அப்படி ரகசியமாக கொடுப்பதாயின் எதற்கு அமைப்பில் உள்ள அங்கத்தவர்கள்?

10 உயிரிழை நிருவாகம் செயற்படுத்தும் முறையற்ற செயல்களை சுட்டிக்காட்டும்படி பணிப்பாளர் சபைக்கு தகவல் பரிமாற ஏன் அங்கத்தவர்களிடம் பணிக்கவில்லை?

11 கடந்த ஆண்டு நிதி அறிக்கைஇ கட்டிட நிதியறிக்கை என பலவகையான கணக்கறிக்கைகள் பொதுக் கூட்டத்தில் வாசிக்கப்படாமல் உள்ளபோதும் ஏன் மீண்டும் வேறு ஒரு நிகழ்வை தொடர்வதின் நேக்கம் என்ன?

12 உயிரிழை நிர்வாகத்தினாருக்கும் நிதி அனுசரணையாளருக்கும் இடையில் கணக்கறிக்கை சமற்பிக்கப்பட்டால் எதற்கு பணிப்பாளர் சபை?எதற்கு அங்கத்தவர்கள்? எதற்கு அமைப்பின் யாப்பு? அதன் விதிமுறை எதற்காக வகுக்கப்பட்டது?

13 உயிரிழை யாப்பின் விதிமுறைக்கு அமைய உயிரிழை நிர்வாகம் செயற்படுகின்றதா? அவ்வாறாயின் ஏன்? இதுவரை நிருவாகத்தினருக்கும் அங்கத்தவர்களுக்கும் இடையிலான ஒன்று கூடலில் கணக்கறிக்கை வாசிக்கப்படவில்லை?

14 கடந்த ஆண்டு சில விதிமுறைகளை கொண்ட படிவத்தினை உயிரிழையின் தலைவர் வாசித்துவிட்டு பயனாளிகளிடம் கையெப்பம் பெற்று இருந்தார் அதில் ''தண்டனை'' எனும் சொல் பயன்படுத்தப்பட்டு இருந்தது.அந்த சொல் உள்வாங்கப்பட்டதன் நோக்கம் என்ன ?

இவ்வாறு பல வினாக்கள் தொடர்ந்து செல்கிறது இவைகள் உயிரிழை அமைப்பை வழிநடத்தும் பணிப்பாளர் சபைக்கு தெரியமல் உள்ளதா அல்லது அதனை கண்டுகொள்ளமல் இருக்கிறதா? அண்மையில் கட்டிடத்தில் பதிக்கப்பட்ட பெயர்பலகையில் ஏன் இரு வருடைய பெயரை மாத்திரம் பதிவிட்ட அது தங்களுக்கு எவ்வாறு தென்படுகிறது. ஒரு அமைப்பு கூட்டாக செயற்பட்ட போதும் அங்கு தனி நபராக பிரிக்கப்பட்டது அமைப்பின் செயற்பாட்டை தாங்கள் எவ்வாறு கவனித்து செயற்படுகிறயள் என்பது தெளிவாக கூறிட முடிகின்றது.

எவ்வாறாயினும் இவைக்கான அனைத்து பதில்களையும் அனைத்து அங்கத்தவர்களின் கருத்துக்களையும் ஏற்று தகுந்த பதிலை எதிர்பாக்கின்றோம்..




”உயிரிழை” அமைப்பா ….... அதன் உன்னதம் என்ன ??? Reviewed by Author on April 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.