அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்கள் விடயத்தில் ஐ.நா தவறிழைப்பு! வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டு....


ஐக்கிய நாடுகள் சபை தமிழர்கள் விடயத்தில் திறமையாக செயற்பட்டிருந்தால் வடக்கில் பல் லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்க மாட்டார்கள் என நேற்றைய தினம் தன்னை சந்தித்த ஐ.நாவின் அபிவிருத்தி  செயற்பாட்டிற்கான அதிகாரியிடம் தெரிவி த்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

 ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பல்வேறு அமைப்புக்களும் வெவ்வேறாக செயற்பட்டு கொண்டுள்ளன. அவற்றிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி செயற்படுவதற்காக தான் இங்கு வந்து என்னை சந்தித்ததாக கூறினார்.

பல்வேறு வழிகளில் ஐ.நாவின் செயற்பாடுகள் ஒவ்வொரு திசையிலே பயணிப்பதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள பொதுச் செயலாளர் கூறி, அவற்றை மாற்றியமைப்பதற்காக தான் இந்த சந்திப்புக்களில் தாம் ஈடுபடுவதாகவும் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை தமிழர் விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொருமித்த தன்மையும் இல்லாமை குறித்தும் எடுத்து காட்டியிருந்தேன். இப்பொழுதும் ஐக்கிய நாடுகள் சபையானது மத்திய அரசுடன் மட்டும் தொடர்புகளை வைத்துகொண்டு செயற்படுகிறார்கள் இதனை ஏற்றுகொள்ள முடியாது.
 ஏற்கெனவே மத்திய அரசு மாகாணத்தை புறந்தள்ளி தாம் நினைத்ததை செயற்படுத்தி வருகின்றது.

எங்களுடன் கலந்தாலோசிக்காது நடவடிக்கை எடுத்து வருவது எம்மிடையே விசனத்தை ஏற்படுத்துகின்றது எனவும் சுட்டிக்காட்டியிருந்தேன். இனி அவ்வாறு நடக்காது என அவர் கூறியிருந்தார்.
இனிவரும் காலத்திலாவது ஐ.நா இதனை திருத்தி மாகாண அரசுடனும் தொடர்புகளை பேணவேண்டும் எனவும் வலியுறுத்தினேன். 

குறிப்பாக போர் இடம்பெற்ற 2009-ம் ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை சிறப்பாக செயற்பட்டு மத்திய அரசின் செயல்பாட் டில் தலையிட்டிருந்தால் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்படாது காப்பாற்றி இருக்கலாம் இனியும் அவ்வாறான ஒரு தவறை ஐ.நாவிடக் கூடாது என வடக்கு முதலமைச்சர் ஊடகங்களில் கருத்துப் பகிர்ந்திருந்தார்.            

தமிழர்கள் விடயத்தில் ஐ.நா தவறிழைப்பு! வடக்கு முதல்வர் சுட்டிக்காட்டு.... Reviewed by Author on May 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.