அண்மைய செய்திகள்

recent
-

கனடாவை புரட்டி போட்ட வெள்ளம்: பிரதமர் நேரில் ஆய்வு...


கனடாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தால் ஏற்பட்ட சேதாரங்கள் மற்றும் மீட்பு பணிகளை அந்நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ நேரில் பார்வையிட்டு வருகிறார்.

மாண்ட்ரீயல், கியூபெக், லாவா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒரே மாகாணத்தில் மட்டும் சுமார் 2,000 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும், 1,000 பேர் மற்றொரு பகுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மீட்புப்பணிகளை மேற்கொள்வதற்காக சுமார் 1,200 ராணுவ வீரர்கள் வெள்ளப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சரான Ralph Goodale நேரில் சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ட்விட்டரில் தகவல் வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் பின்னர் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு தேவையான அவசர உதவிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ராணுவ வீரர்களுடன் இணைந்து பிரதமரும் உணவு மற்றும் பிற வசதிகளை நேரில் அளித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், மாகாணம் முழுவதும் 12 உதவி மையங்களை அமைத்துள்ளதாகவும், இவற்றின் மூலம் சுமார் 100 தன்னார்வ தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும், மீட்பு பணிகள் எப்போதும் முடிவடையும் என்ற உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வரும் ராணுவ வீரர்கள், தன்னார்வ தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கனடாவை புரட்டி போட்ட வெள்ளம்: பிரதமர் நேரில் ஆய்வு... Reviewed by Author on May 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.