அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் மிகவும் வறுமையான மாவட்டமாக முல்லைத்தீவு மாறியுள்ளது: து.ரவிகரன்


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வளமான பல இடங்களை படையினர் பிடித்து வைத்திருப்பதனாலேயே அந்த மாவட்டம் இலங்கையில் மிகவும் வறுமையான மாவட்டமாக மாறியுள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 92வது அமர்வு இன்று(09) இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்திற்காக ஐனாதிபதி முல்லைத்தீவுக்கு வருகை தருகின்றார்.

அதேசமயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வளமான நிலங்களை படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இதனாலேயே முல்லைத்தீவு மாவட்டம் இலங்கையில் மிகவும் வறுமையான பகுதியாக காணப்படுகின்றது.

எனவே எமக்கு வறுமை ஒழிப்பு செயற்றிட்டம் தேவையில்லை. எமது வளமான காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறு எமது காணிகள் விடுவிக்கப்படுமானால் எமக்கு அரசாங்க உதவிகள் தேவையில்லை என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மிகவும் வறுமையான மாவட்டமாக முல்லைத்தீவு மாறியுள்ளது: து.ரவிகரன் Reviewed by Author on May 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.