அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-மக்கள் பாதிப்பு.(photos))

அரச வைத்தியர்கள் சங்கம், இன்று திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் 24 மணிநேரம், வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

.மாலபேயில் அமைந்துள்ள தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனமான (சைட்டம்) தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

-இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று திட்கட்கிழமை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

-இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

-இதே வேளை தமது வேளை நிறுத்தம் குறித்து மன்னார் வைத்தியசாலை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில' மேலும் குறிப்பிடுகையில்,,.

இன்றைய வேலைநிறுத்தம் 'சய்டம்' சம்பந்தமான அண்மைக்கால நிலைவரத்தினால் எம்மேல் திணிக்கப்பட்ட தொன்றாகும். அதாவது கடந்த கிழமை பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை முடக்க எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளுக்கு ஏதிராகவும் இன்றைய தினம் எமது சங்கத்தின் தலைவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்தும் நடாத்தப்படுகிறது.

இந் நாளில் மன்னார் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவும், கிழமை தோறும் நடாத்தப்படும் கிளினிக்களும் நடைபெறவில்லை.

ஆனாலும் அவசர சிகிச்சைகளும் உள் நோயாளர் பிரிவும் இயங்குகின்றது. உள் நோயாளர் பிரிவில் அவசர சத்திரசிகிச்சை தவிர்ந்த தினம் குறிப்பிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் நடைபெறவில்லை.

'சய்டம்' பிரச்சனை மிகவும் சிக்கலானது மட்டுமன்றி நீண்டகாலமாக அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினால் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்றாகக் காணப்படுகிறது.

நாங்கள் இதைப் பல காரணங்களினால் எதிரக்கிறோம். அவற்றில் சில வருமாறு:

1. 'சய்டம்' ஆரம்பத்திலிருந்தே பிழையான தகவல்களினால் மக்களையும் அதிகாரிகளையும் ஏமாற்றி ஆரம்பிக்கப்பட்ட கபடம் நிறைந்த ஒரு நிறுவனமாகும்.

2. திரும்பத்திரும்ப இலங்கை வைத்திய கவுன்சிலினால் தகுதிக் குறைபாடுகளைக் காட்டியும் அவற்றைச் சரிப்படுத்தாமல் வைத்தியர்களைப் பதிவுசெய்ய முயற்சிக்கிறார்கள்.

3. பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் அரசாங்கத்தையும் ஊடகங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்து மக்களை ஏமாற்றி, மக்களை ஆபத்துக்குள்ளாக்குகிறார்கள். என குறிப்பிடப்பட்டுள்ளது.




   








மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு-மக்கள் பாதிப்பு.(photos)) Reviewed by NEWMANNAR on May 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.