அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் 2 ஆவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பு- நோயாளர்கள் தொடர்ச்சியாக பாதிப்பு

சைட்டம் தனியார் நிறுவனத்திற்கு எதிராக கடந்த புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அரச வைத்தியர்கள் சங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கை இரண்டாவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.

-அரச வைத்தியர்கள் சங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் இரண்டாவது நாளாக இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
-இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

சைட்டம் தனியார் நிறுவனத்திற்கு எதிராக புதன் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சுகாதார அமைச்சு வளாகத்தில் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
-இதன் போது அங்கு ஏற்பட்ட அமைதியின்மையின் போது பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலின் போது பல்கலைக்கழக மாணவர்கள் பலர் காயமடைந்திருந்தனர்.

-இந்த நிலையில் குறித்த தாக்குதலைக்கண்டித்து அரச வைத்தியர்கள் சங்கத்தினர் நேற்று வியாழக்கிழமை(22) காலை 8 மணிமுதல் தமது பணிப்பகிஸ்கரிப்பை ஆரம்பித்தனர்.
-குறித்த பணிப்பகிஸ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

-இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.வெளி நோயளர் பிரிவின் செயற்பாடுகள் அணைத்தும் இயங்காத நிலை காணப்பட்டது.

இதனால் சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இரண்டாவது நாளாகவும் தமது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் பல்வேறு சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வந்த மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
-வெளி நோயாளர் பிரிவின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அமைந்துள்ளது.

இதனால் நீண்ட தூரத்தில் இருந்து சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலைக்கு வந்த மக்கள் தனியார் மருந்தகங்களை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

-கடந்த இரண்டு மாதங்களுக்குள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுமார் 4 தடவைகள் இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாகவும்,இதனால் தொடர்ந்து பாதீக்கப்பட்டு வருவது பொது மக்களே என மன்னார் மாவட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.






மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் 2 ஆவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பு- நோயாளர்கள் தொடர்ச்சியாக பாதிப்பு Reviewed by NEWMANNAR on June 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.