அண்மைய செய்திகள்

recent
-

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக வடக்கு முதல்வரை பதவி நீக்க முடியாது...அதுதான் சரி


வடக்கு முதலமைச் சர் சீ.வி.விக்கினேஸ்வரனை பதவி நீக்க வேண் டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை அவசியமில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக வடக்கு முதல்வரை பதவி நீக்க முடியாது.

ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் நினைத்தால் ஆளுநருக்கு கடிதம் எழுதி முதலமைச்சரை மாற்றலாம். அதுவே சட்டத்தில் காணப்படும் விடயமாகும்.

இதுகூட தெரியாமல் இவர்கள் அரசியல் செய்துகொண்டிருப்பது வியப்பளிக்கின்றது என்று சிறிலங்காசுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

எந்தவொரு கட்சி மாகாண சபைத் தேர்தலில் 50 வீதத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை பெறுகின்றதோ அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் யாருடைய பெயரை பரிந்துரைக்கின்றாரோ அவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்.

அவ்வாறு 50 வீத உறுப்பினர்களை பெற்ற கட்சி நியமிக்கும் முதலமைச்சரை நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் நீக்க முடியாது. கட்சியின் செயலாளர் மட்டுமே அதனை செய்யலாம். இதுதான் சட்டம் என்றும் டிலான் பெரெரா சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பதவி விலக்குவதற்கு நம்பிக்கையில்லா பிரேரணை அவசியமற்றது. நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் வடக்கு முதல்வரை பதவி நீக்கவும் முடியாது.

மாகாண சபை சட்டத்தின் ஊடாக மாகாண சபைத் தேர்தலில் எந்தவொரு கட்சி மாகாண சபைத் தேர்தலில் 50 வீதத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை பெறுகின்றதோ அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் யாருடைய பெயரை பரிந்துரைக்கின்றாரோ அவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்.

பொதுச் செயலாளர் பரிந்துரை செய்யும் உறுப்பினரை ஆளுநர் முதலமைச்சராக நியமிக்கவேண்டும்.அவ்வாறு 50 வீத உறுப்பினர்களை பெற்றகட்சி நியமிக்கும் முதலமைச்சரை நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் நீக்க முடியாது. இதுதான் மாகாண சபை சட்டமாகும். இது தெரியாமல் ஆளுநரும் அரசியல்வாதிகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமை வியப்பளிக்கின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்தால் அதனை ஆளுநர் ஏற்றாக வேண்டும்.

ஆனால் கிழக்கு மாகாண சபையில் இதனை செய்ய முடியாது. காரணம் அங்கு எந்தவொரு கட்சியும் 50 வீதமான உறுப்பினர்களை பெற்று முதலமைச்சரை நியமித்து ஆட்சியமைக்கவில்லை. எனவே இங்கு நம்பிக்கையில்லா பிரேரணை செல்லுபடியாகும்.

எனினும் வடக்கு உள்ளிட்ட ஏனைய எட்டு மாகாண சபைகளிலும் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் முதலமைச்சரை பதவி நீக்க முடியாது.

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண சபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர நினைத்தால் முதலமைச்சர்களை மாற்றலாம்.

மாறாக நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் முதலமைச்சர்களை மாற்ற முடியாது. இது தெரியாமல் வடக்கின் அரசியல்வாதிகள் என்ன செய்கின்றனர் என்று தெரியவில்லை.

மேலும் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இந்த விடயம் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது என்றார்.

பிரபல சட்டத்தரணியான சுமந்திரனுக்கும் இந்த விடயம் தெரியாமல் இருக்குமா? அவருக்கு நிச்சயமாக தெரியும். ஆனால் என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்காக மௌனமாக இருக்கின்றார்.


நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக வடக்கு முதல்வரை பதவி நீக்க முடியாது...அதுதான் சரி Reviewed by Author on June 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.