அண்மைய செய்திகள்

recent
-

திரிசங்கு நிலையில் வடக்கு முதலமைச்சர்!


வடக்கு மாகா­ண­ச­பையின் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களும், அவை தொடர்­பான விசா­ர­ணையின் முடி­வு­களும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு அமிலப் பரி­சோ­த­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது.

சபை உறுப்­பி­னர்­களின் தொடர்ச்­சி­யான குற்­றச்­சாட்­டு­களைப் புறக்­க­ணிக்க முடி­யாமல், தானே நிய­மித்த அமைச்சர்களுக்கு எதி­ராக, விசா­ரணைக் குழு­வொன்றை நிய­மிக்க வேண்­டிய நிலை முத­ல­மைச்­ச­ருக்கு ஏற்பட்டிருந்தது.

அர­சியல் ரீதி­யாக இது அவ­ரது முதல் தோல்வி.ஆனால், வெளிப்­ப­டைத்­தன்­மை­யான நிர்­வாகம், பொறுப்­புக்­கூ­றலில் உறு­தி­யாக இருப்­ப­தையும் அவ­ரது இந்த முடிவு காட்டி நின்­றது,

விசா­ரணை அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டதும், அதில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பது முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு மிகப்­பெ­ரிய நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்த விசா­ரணை அறிக்­கையை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வது, குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுப்­பது ஆகிய இரண்டு விட­யங்­க­ளிலும், தீர்க்­க­மான ஒரு முடி­வுக்கு வர­ மு­டி­யா­த­வ­ராக முத­ல­மைச்சர் இருக்­கிறார் என்­பதை அவர், வடக்கு மாகா­ண­ச­பையில் ஆற்­றிய உரை தெளி­வாக்­கி­யி­ருக்­கி­றது.

விசா­ர­ணைக்­குழு, அதன் அறிக்கை, அடுத்த கட்டம் இந்த மூன்று விட­யங்­க­ளிலும், முத­ல­மைச்­ச­ருக்கு குழப்­பங்கள் இருப்­ப­தாக தெரி­கி­றது.பொது­வா­கவே எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் விசா­ரணைக் குழுக்­களை அமைக்கும் போது, அதன் நம்­ப­கத்­தன்­மையும், முக்­கி­யத்­து­வ­மா­னது.

விசா­ர­ணைக்­கு­ழுக்­களின் உறுப்­பி­னர்கள் பக்­க­சார்­பற்­ற­வர்­க­ளா­கவும், நேர்­மை­யா­ன­வர்­க­ளா­கவும், அதே­வேளை, முதல­மைச்சர் தனது உரையில் குறிப்­பிட்­டது போன்று, பிறரைக் குற்­றம்­சாட்டத் தகு­தி­யா­ன­வ­ரா­கவும் இருக்க வேண்டும்.

இவை­யெல்லாம் பொது­வாக ஒரு விசா­ர­ணைக்­கு­ழு­விடம் எதிர்­பார்க்­கப்­படும் விட­யங்கள்.அவ்­வா­றான ஒரு விசாரணைக்­கு­ழு­வையே, முத­ல­மைச்சர் நிய­மித்­தாரா என்­பது முத­லா­வது விடயம்.

ஏனென்றால், வடக்கு மாகா­ண­ச­பைக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் நடக்கும் வழக்கில், குறித்த விடயம் தொடர்­பாக எதிர்த்­த­ரப்பு சார்பில் சட்­டத்­த­ர­ணி­யாக முன்­னி­லை­யாகும் ஒருவர், அதே­வி­டயம் தொடர்­பான விசா­ர­ணையில் நீதிபதியாக பங்­கேற்­றி­ருக்­கிறார் என்று அமைச்சர் ஐங்­க­ர­நேசன் கூறி­யி­ருக்­கிறார்.

அவர் கூறிய விடயம் சுன்­னாகம் நிலத்­தடி நீர் வழக்கு விவ­கா­ர­மாக இருக்­கலாம். இந்த விட­யத்தில், அமைச்சர் ஐங்­க­ர­நேசன் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

அடுத்து, விசா­ர­ணைக்­கு­ழுவில் இடம்­பெற்­றி­ருந்த ஓர் உறுப்­பினர், அரச சேவையில் இருந்த காலத்தில் குற்றச்சாட்டுகளுக்கு உள்­ளா­னவர் தான். அவர் மீதான குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­ப­டாத போதிலும், அவர் கூட இது­போன்ற ஒரு சூழலை எதிர்­கொண்­டவர் தான் என்­ப­தையும் மறந்து விட­லா­காது.

நம்­ப­க­மான ஒரு விசா­ரணைக் குழுவில் இது­போன்ற பாத­க­மான அம்­சங்கள் இருப்­பது ஒட்­டு­மொத்த முயற்­சி­யையும் வீண­டித்து விடும். முத­ல­மைச்சர் அமைத்­துள்ள விசா­ர­ணைக்­கு­ழுவில், இருக்கக் கூடிய இன்னும் பல ஓட்­டைகள் வரும் நாட்­களில் வெளி­வரக் கூடும்.

அடுத்து விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்கை, முற்­றிலும் சரி­யா­னதா- நம்­ப­க­மா­னதா என்ற கேள்வி முத­ல­மைச்­ச­ருக்கே இருப்­ப­தாக தெரி­கி­றது.

இந்த விசா­ர­ணைக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் தொடர்­பாக அமைச்­சர்கள் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தாலும், விசா­ரணைக் குழு நியா­ய­மான விசா­ர­ணை­களை நடத்­தி­யி­ருந்­தது என்றே முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கூறி­யி­ருந்தார்.

ஆனாலும், அவரும் கூட, அறிக்­கையில் சில தக­வல்கள் தவ­றாக இடம்­பெற்­றுள்­ளன என்­பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். தான் பங்­கேற்­காத கூட்டம் ஒன்றில், பங்­கேற்­ற­தாக விசா­ரணை அறிக்­கையில் கூறப்பட்டுள்­ள­தாக முதலமைச்சர் கூறி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, அவையில் விளக்­க­ம­ளித்த, அமைச்சர் ஐங்­க­ர­நேசன், தாம் கூறிய விட­யங்கள் சில­வற்றை விசாரணைக்­குழு கவ­னத்தில் எடுக்­க­வில்லை என்றும், கூறா­த­வற்றை கூறி­ய­தாக குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­கவும், குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கிறார்.

இந்தக் கட்­டத்தில், விசா­ரணைக் குழுவின் அறிக்கை நூற்­றுக்கு நூறு வீதம் சரி­யா­னது என்­பதை உறு­திப்­ப­டுத்தக் கூடிய நிலையில், முத­ல­மைச்­சரும் இல்லை என்­பதே உண்மை.

விசா­ரணைக் குழு ஒன்றின் அறிக்­கையில், தர­வு­களும், தக­வல்­களும், முற்­றிலும் சரி­யா­ன­தாக இருக்க வேண்டும். ஏனென்றால், குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்கும் போது, குற்­றம்­சாட்­டப்­படும் ஒருவர், தன்னை நிர­ப­ராதி என்று கூறித் தப்­பித்துக் கொள்­வ­தற்கு இது­போன்ற தவ­று­களைப் பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும்.

அதே­வேளை, இது­போன்ற தவ­று­களின் கார­ண­மாக, நிர­ப­ரா­தி­யான ஒருவர், குற்­ற­வா­ளி­யாக்­கப்­படும் நிலையும் ஏற்­படக் கூடும். ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­க­ளான இரண்டு பேர் விசா­ரணைக் குழுவில் இடம்­பெற்­றி­ருந்தும், சுட்­டிக்­காட்­டத்­தக்க தவ­றுகள் சில அறிக்­கையில் இருப்­ப­தாக முத­ல­மைச்­சரும், அமைச்­சரும் கூறி­யி­ருப்­பது கவ­னத்தில் கொள்ள வேண்டிய விடயம்.

இந்த அடிப்­ப­டையில் பார்க்கும் போது, அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக கூறப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள், முற்­றிலும், தவ­றா­னவை என்ற முடி­வுக்கு வர­மு­டி­யா­வி­டினும், அவர்கள் மீதான குற்­றச்­சாட்­டு­களை தமது அறிக்­கையில் எந்த வழுக்களு­மின்றி முன்­வைக்கும் வகையில் விசா­ரணைக் குழு செயற்­பட்­டி­ருக்­க­வில்லை என்றே கருத வேண்டியிருக்கி­றது.

இப்­ப­டி­யான நிலையில் தான், இந்த விசா­ரணை அறிக்­கையை வைத்து அடுத்த கட்டம் குறித்து தீர்­மா­னிப்­பதில் முத­ல­மைச்சர் நெருக்­க­டியை எதிர்­கொண்­டி­ருக்­கிறார்.ஓய்­வு­பெற்ற நீதி­ய­ர­ச­ரான முத­ல­மைச்சர், இந்த விட­யத்தில் எந்த தவ­றையும் தான் இழைத்து விடக்­கூ­டாது என்­பதில் கவ­ன­மாக இருக்­கிறார்.

ஏனென்றால், நீதி­மன்­றத்தில் அவர் முன்னர் அளித்த தீர்ப்­புகள் கேள்­விக்­குள்­ளாக்­கப்­பட்­டி­ருந்தால் அது அவ­ரது தனிப்­பட்ட புக­ழுக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­காது.

அர­சியல் வாழ்வில் அவர் தவ­றான முடிவை எடுத்தால், அது அவ­ருக்குப் பாத­க­மா­கவே அமைந்து விடும்.இந்த விடயத்தில் தானே முடிவை எடுக்கும் அதி­காரம் கொண்­டவர் என்­பதை, முத­ல­மைச்சர் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

ஏனென்றால் இது அவர் நிய­மித்த விசா­ரணைக் குழு. அதன் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு அவ­ருக்கே அதி­கா­ரமும் இருக்­கி­றது.இருந்­தாலும், குற்­றம்­சாட்­டப்­பட்ட அமைச்­சர்கள் மீது அவரால் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க முடியவில்லை.

அவர்­களை பத­வியில் இருந்து வில­கு­மாறு கோர முடி­ய­வில்லை.ஏனென்றால், அவர்கள், முத­ல­மைச்­சரால் நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள். தாமே நிய­மித்­த­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்கும் போது, ஒரு­வ­கையில் நீதி­யான செயற்­பாடு என்று வெளிப்­ப­டை­யாக கூறப்­பட்­டாலும், இன்­னொரு பக்­கத்தில், அவ­ருக்கும் இதில் பொறுப்பு உள்­ளது தானே என்ற விமர்­ச­னங்­க­ளையும் எதிர்­கொள்ள வேண்டி வரும்.

முடி­வெ­டுக்கும் அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்­தாலும், குற்­றச்­சாட்­டுக்­குள்­ளான அமைச்­சர்­க­ளி­னது, கருத்­துக்­களை அறிந்தும், சபை உறுப்­பி­னர்­களின் கருத்­துக்­களை அறிந்­துமே முடி­வெ­டுப்­ப­தாக முத­ல­மைச்சர் கூறி­யி­ருக்­கிறார்.

விசா­ரணைக் குழு, மற்றும் அதன் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ள குறை­பா­டுகள் சில­வற்­றினால், ஒட்­டு­மொத்த விசா­ரணை அறிக்­கையும் தவறு என்று சுட்­டிக்­காட்­டப்­படக் கூடிய நிலை உள்­ளதைக் கருத்தில் கொண்டே, அவ­ச­ரப்­பட்டு முடி­வெ­டுக்க முடி­யாத நிலை முத­ல­மைச்­ச­ருக்கு இருக்­கி­றது.

இன்­னொரு பக்­கத்தில், இந்த விசா­ரணைக் குழுவின் அறிக்­கையை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தற்கு முத­ல­மைச்சர் தயங்­கு­கிறார். அறிக்­கையை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வது மாகா­ண­ச­பைக்கே களங்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அதனால், ஊட­கங்கள் அனு­ம­திக்­கப்­ப­டாத மூடிய அறைக்குள் விவா­தித்து இந்த விவ­கா­ரத்­துக்கு முடி­வெ­டுக்க வேண்டும் என்றும், முத­ல­மைச்சர் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறார்.


முத­ல­மைச்­சரின் இந்தக் கோரிக்­கை­யா­னது உண்மை மற்றும் வெளிப்­ப­டைத்­தன்மை என்ற கொள்­கைக்கு முரண்­பா­டா­னது. உண்மை, வெளிப்­ப­டைத்­தன்மை, பொறுப்­புக்­கூறல் என்­பது பொது­வாழ்வில் உள்ள அனை­வ­ருக்கும் பொது­வா­னது.

எனவே நீதி­யா­ன­தாக மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு விசா­ரணை என்றால், அந்த அறிக்­கையை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வதில் தவறில்லை.

இந்த விசா­ர­ணைக்­குழு முத­ல­மைச்சர் தனக்கு ஆலோ­சனை கூறு­வ­தற்­காக அமைத்துக் கொண்­டது தானே தவிர, வடக்கு மாகா­ண­ச­பையால் அமைக்­கப்­பட்­ட­தல்ல.

அந்தக் கார­ணத்தை வைத்து, அறிக்­கையைப் பகி­ரங்­கப்­ப­டுத்­தாமல் விடு­வ­தற்கு முத­ல­மைச்சர் முயற்­சிப்­ப­தாக தெரி­கி­றது.ஆனால், 2010ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன் இலங்­கையில் போர்க்­குற்­றங்கள் நடந்­துள்­ளதா என்று தமக்கு ஆலோ­சனை கூறு­வ­தற்­காக அமைத்த நிபுணர் குழுவின் அறிக்­கையை அவரே பகி­ரங்­கப்­ப­டுத்­தினார்.

அதன் அடிப்­ப­டையில் தான் இலங்­கைக்கு எதி­ரான நகர்­வுகள் ஜெனீ­வாவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.மத்­திய அர­சாங்கம் அமைத்த விசா­ரணைக் குழுக்­களின் அறிக்­கைகள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்றும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்றும், முத­ல­மைச்­சரே பல­முறை குற்­றச்­சாட்­டு­களை கூறி­யி­ருக்­கிறார்.

அப்­ப­டி­யி­ருக்கும் போது, இந்த விசா­ரணை அறிக்­கையை மாத்­திரம், அவர் பகி­ரங்­கப்­ப­டுத்­தாமல் வைத்­தி­ருப்­பது நியா­ய­மற்­றது. அதை­விட, அறிக்கை முத­ல­மைச்­சரின் கையில் இருந்த போதே அது ஊட­கங்­க­ளுக்கு கசிந்­தி­ருந்­தது.

இப்­போது அறிக்கை சபை உறுப்­பி­னர்­களின் கைக­ளுக்கும் வந்து விட்ட நிலையில் அது நிச்­சயம் வெளி­வந்தே தீரும்.

அவ்­வா­றா­ன­தொரு நிலையை தவிர்ப்­ப­தற்­காக, வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­ட­னேயே இருக்­கிறோம் என்­பதை நிரூ­பித்துக் கொள்­வ­தற்­கான வாய்ப்­பு­களை முத­ல­மைச்சர் தவ­ற­ வி­டு­வது அர­சியல் ரீதி­யாக அவ­ருக்கே பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

அறிக்­கையைப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வதால் வடக்கு மாகா­ண­ச­பைக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்ற முத­ல­மைச்­சரின் கருத்து அபத்­த­மா­னது.

ஏனென்றால், வடக்கு மாகா­ண­ச­பையின் புனி­தத்­தன்­மைக்கு அதன் உறுப்­பி­னர்­களும், அமைச்­சர்­க­ளுமே பொறுப்பு. அந்த எதிர்­பார்ப்பே தமிழ் மக்­க­ளிடம் இருந்­தது,

விசா­ரணை அறிக்கை முற்­றிலும் சரி­யா­ன­தாக இருந்தால், நடந்­துள்ள தவ­றுகள் அனைத்தும் மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட வேண்டும். எங்கெங்கு தவறுகள் நடந்துள்ளன என்பதை அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தவறுகளையும், அறிக்கைகளையும் மூடி மறைக்கின்ற போது தான், அது மேலும் மேலும் விஸ்வரூபம் எடுக்கும்.

தவறுகளைக் களைவதற்கான ஆரம்ப நடவடிக்கையை எடுக்காது போனால், வடக்கு மாகாணசபை மேலும் மேலும் தலைகுனிவுகளைச் சந்திக்கும். அது, ஆளுனர், மத்திய அரசின் தேவையற்ற தலையீடுகளுக்கும் வழி வகுக்கும்.

தவறு செய்தவர்கள், வெளிப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் பொதுவாழ்வுக்கு வரும் அனைவருக்கும் இருக்க வேண்டும். அப்போது தான், அவர்கள் நிலை மாறாமல் செயற்படுவார்கள்.

தவறுகள் ஒளிக்கப்படும் என்ற நிலையை முதலமைச்சர் நீடிக்க அனுமதித்தால், அது நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி என்ற எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள மக்களுக்கு பேரிடியாகவே அமைந்து போகும்.

முதலமைச்சரைப் பொறுத்தவரையில், இந்த விவகாரத்தில் முடிவுகளை எடுப்பதில் நிறையவே யோசிக்கிறார்.

அவர் எடுக்கக்கூடிய முடிவுகள் ஒவ்வொன்றும் பின் விளைவுகளைத் தரக் கூடியவையே.எனவே தான், அவர், சரியான முடிவை எடுப்பதற்கு குழப்பமான சூழ்நிலைகள் பலவற்றைத் தாண்ட வேண்டிய நிலையில் இருக்கிறார்.

சுருங்கச் சொல்லின், குற்றஞ் சாட்டப்பட்ட அமைச்சர்களை விட, திரிசங்கு நிலையில் இருப்பது முதலமைச்சர் தான்.

திரிசங்கு நிலையில் வடக்கு முதலமைச்சர்! Reviewed by Author on June 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.