அண்மைய செய்திகள்

recent
-

டெங்கு நோய் ஒழிப்பினை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சிரமதானப் பணி

நாட்டில் தற்போது அதிகரித்த நிலையில் காணப்படும் கொடிய நோயான டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் முல்லை மருத்துவர் சங்கமும் இணைந்து இன்று (08.06.2017) சிரமதானப் பணியொன்றை மேற்கொண்டனர்.

காலை 6.00 மணிக்கு தொடங்கிய இச்சிரமதானப் பணி காலை 10.00 மணி வரைக்கும் சிறந்தமுறையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து தொடங்கிய சிரமதானம் சிலாவத்தைச் சந்தி வரையும் மற்றும் முல்லைத்தீவு கடற்கரையிலும் இச்சிரமதானப் பணி மேற்கொள்ளப் பட்டது.

வைத்தியசாலை சார்பில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகள் பங்குபற்றியிருந்தனர். அத்தோடு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

டெங்கு நோய் ஏற்படுவதற்கு காரணம் டெங்கு நுளம்பாகும். இந்த நுளம்பானது தோன்றுவதற்கு தேங்கிய நீரில் எட்டு நாட்கள் போதுமானது. எனவே இதனைக் கட்டுப்படுத்த நீர் தேங்கக்கூடிய சிறிய இடம்கூட இல்லாது ஒழிப்பதே சிறந்த வழி. அந்தவகையிலே இச்சிரமதானப் பணியும், வீதி ஓரம் மற்றும் கடற்கரை ஓரங்களில் நீர் தேங்கி நிற்ககூடிய சந்தர்ப்பமுள்ள பொலித்தீன் பைகள், போத்தல்கள், யோக்கட் கோப்பைகள் சிரட்டைகள் போன்ற பொருட்களை அகற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தது.

நாம் ஒவ்வொருவரும் வீசும் பொலித்தீன் பைகள், யோக்கட் மற்றும் ஐஸ்கிறீம் கோப்பைகள், இளநீர் கோம்பைகள், சிரட்டைகள் போத்தல்கள் என்பற்றால் ஏற்படும் ஆபத்தினை இச்சிரமதானம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தனர்.

2017 ஆம் ஆண்டில் இன்றுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 134 டெங்கு நோயாளர்களும் நாடுமுழுவதும் 59,760 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். நாட்டின் மற்றை மாவட்டங்களோடு ஒப்பிடும்போது முல்லைத்தீவு மாவட்டமே மிக குறைந்த டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

எமது வீடு, சுற்றுப்புறங்களில் நீர் தேங்கும் இடங்களை இல்லாதொழிப்பதன் மூலம் நாமும் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

-- முல்லை கதிர் --







டெங்கு நோய் ஒழிப்பினை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சிரமதானப் பணி Reviewed by NEWMANNAR on June 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.