அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை பிரிவில் அமைக்கப்படும் காற்றாலை செயல் திட்டத்திற்கு 'குடிபுகு சான்றிதழ்' பெற்றுக் கொள்ளவில்லை- மன்னார் நகர சபை கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை-மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்

 மன்னார் நகர சபை பிரிவில் அமைக்கப்பட்டு வருகின்ற காற்றாலை செயல் திட்டத்திற்கு மன்னார் நகர சபையினால் வழங்கப்படுகின்ற குடிபுகு  சான்றிதழ் ஐ அவர்கள் இது வரை பெற்றுக்கொள்ளவில்லை. குறித்த சான்றிதழை பெற்றுக் கொள்ளாமல் அவர்கள் தமது செயல்பாட்டை  தொடர்ந்து முன்னெடுத்தால்  நகர சபை கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.


-மன்னார் நகர சபையில் இன்று வெள்ளி (24) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,,,


மன்னார் நகர சபை பிரிவில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்களுக்கான அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது.எனினும் மன்னார் நகர சபையிடம் எவ்வித அனுமதியும், ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படவில்லை.


சில நிறுவனங்களின் அனுமதியுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை அனுமதியை வழங்கியுள்ளது.நேற்றைய தினம் வியாழக்கிழமை(23) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வினவிய விடையம் என்ன என்றால் 1986 ஆம் ஆண்டு சட்டத்தின் படி நகர அபிவிருத்தி அதிகார சபை 9 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கும், ஒரு ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களிலே முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கும்   நகர அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்குகிறது.


ஆனால் நகர சபையின் சட்டம் 1939 ஆம் ஆண்டு 255 ஆவது பிரிவு 118 சொல்லுகின்றது.அனுமதியற்ற கட்டிடங்களுக்கான அறிவுறுத்தல்களை கொடுக்க வேண்டும்.119 சொல்லுகின்றது அனுமதியற்ற கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்று.ஆனால் மன்னார் நகர சபை பிரிவில் காற்றாலைக்கு வழங்கப்பட்ட அனுமதியில் மன்னார் நகர சபையின் எவ்வித அனுமதியும் இல்லை.


எனவே நான் அவர்களிடம் வினவினேன் எங்களுடைய 255 பிரிவு 118,119 இன் பிரகாரம் ஏன் குறித்த திட்டத்திற்கு தடை விதிக்க கூடாது? அல்லது அனுமதியற்ற கட்டிடம் என அகற்ற முடியாதா? என அவர்களிடம் வினவினேன்.


அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் பிழையை ஏற்றுக் கொண்டார்கள். இனி வரும் காலங்களில் மதஸ்தலங்கள் உள்ளிட்ட சில கட்டிடங்கள் அமைக்கின்ற போது நகர சபையின் அனுமதி மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர். மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை கோபுரங்களுக்கு 'குடிபுகு  சான்றிதழ்' (C.O.C)   எடுத்து உள்ளார்களா?என்று கேள்வி எழுப்பினேன்.ஆனால் அவர்கள் அச்சான்றுதழை எடுக்கவில்லை.


குறித்த சான்றிதழ் இல்லாமல் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்தல்,அல்லது அவர்கள் அமைத்துள்ள கட்டிடங்களை பயண் படுத்துவதையோ முற்றாக தடை செய்ய வேண்டும்.நகர சபை சட்டத்தின் ஊடாக   'குடிபுகு    சான்றிதழ் இல்லை என்றால் குறித்த செயல் திட்டத்தை தடை செய்கிற அதிகாரம்  எமக்கு உள்ளது.


-மக்களுக்கு இடையூராகவும் இடைஞ்சலாகவும் இருக்கின்ற கட்டிடங்கள்,வீதிகள்,மதில்கள் போன்றவற்றை அகற்றுவதற்கான அதிகாரம் மன்னார் நகரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.


எனவே   'குடிபுகு     சான்றிதழ்'     கட்டாயம் அவர்கள் எடுக்க வேண்டும்.அச் சான்றிதழ் எடுக்கும் போதே அவர்கள் என்ன கட்டுப்பாடுகளை மீறி உள்ளார்கள் என்பதை பரிசீலித்து பார்க்க முடியும்.குறிப்பாக குறித்த திட்டம் ஓடாக வடிகானமைப்பிற்கான நீரோட்டங்கள் தடைப் பட்டுள்ளதா,மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் காற்றாலை கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளதா?  என்பதையும் பார்ப்போம்.


மேலும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குறித்த காற்றாலை அமைக்கப்பட்டுள்ளதா?, அதற்கான எல்லைகளையும் நாங்கள் பரிசோதிப்போம். இவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டால் குறித்த காற்றாலை  கோபுரங்கள்  மன்னார் நகர சபை சட்டத்தின் ஊடாக  அகற்றப்படும்.


 மன்னார் நகர சபையின்    'குடிபுகு  சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமல் மன்னாரில் காற்றாலை  திட்டத்தை   அவர்கள் முன்னெடுக்க முடியாது.மன்னார் நகர எல்லையில் அவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என்பதை அவர்களுக்கு தெரிவித்துள்ளேன்.


எனவே மன்னார் நகர சபை பிரிவில் நகர திட்டமிடல் அதிகார சபை மற்றும் மன்னார் நகர சபையின் அனுமதி பெற்றுக் கொள்ளாது காற்றாலை மின் திட்டம் என்றால் என்ன? எத் திட்டமாக இருந்தாலும் அத்திட்டங்கள் அனைத்தையும் மன்னார் நகர சபை முற்றாக தடை செய்யும் என தெரிவித்தார்.


மேலும் மன்னார் நகர சபை பிரிவில் 108 அனுமதியற்ற கட்டடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதற்கான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. அதிகமான கட்டிடங்கள் அனுமதி பெற்றுக் கொள்ளாமல் அமைக்கப்பட்டுள்ளது.


குறித்த கட்டிடங்கள் அதாவது மதில் ,வீடு,கடைத்தொகுதி உள்ளடங்களாக அனைத்தும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கட்டிடங்களாக கருதப்படும்.திட்டமிடப்படாத கட்டிடங்களால் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அர்த்தங்கள் ஏற்படுகிறது.


எனவே கட்டிடம் கட்டிய பின்னர் எடுக்கின்ற அனுமதியையாவது எடுக்க வேண்டும்.அல்லது நகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இடித்து அகற்றப்படும்.


 நிறைய கட்டிடங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.உரிய முறையில் செயல் படாது விட்டால் நகர சபை கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும் மன்னார் நகர சபையின் கடந்த அமர்வின் போது தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளோம்.மன்னார் நகர சபை பிரிவில் உள்ள உணவகங்கள் அனைத்திலும் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் லஞ்ச்சீற் பயன்படுத்துவது தடை செய்வது என்று.


அதற்கு பதிலாக உக்கக்கூடிய,சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத உணவு தட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதனை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.




மன்னார் நகர சபை பிரிவில் அமைக்கப்படும் காற்றாலை செயல் திட்டத்திற்கு 'குடிபுகு சான்றிதழ்' பெற்றுக் கொள்ளவில்லை- மன்னார் நகர சபை கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை-மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் Reviewed by Vijithan on October 24, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.