அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2025 /2026 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கை தொடர்பில் அரச அதிபர் தலைமையில் முன்னோடிக் கூட்டம்.

 கட்டுக்கரை குளத்தின் கீழான 2025 /2026 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கை முன்னோடிக் கூட்டமானது மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று புதன்கிழமை (22) காலை மன்னார் உயிலங்குளத்தில் இடம் பெற்றது.


இதன் போது விவசாய அமைச்சு ஊடாக 4% வட்டி உடனான கடன் தொடர்பான விழிப்புணர்வு மாவட்ட விவசாய பணிப்பாளரினால் எடுத்துரைக்கப்பட்டது .

விவசாய கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விளக்கங்கள் வங்கிகள் அலுவலர்கள் மூலம் சாதகமான முறையில் வழங்கப்பட்டது.


நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் போதுமான அளவு நீர் கிடைக்க பெற்று வருகிறது என்பதை உறுதி செய்ததுடன் சாதகமான நிலை உள்ளத்தையும் உறுதிப்படுத்தினர்.

விவசாய கடன் திட்டங்கள் தொடர்பான முதற் கட்டமாக நான்கு விவசாயிகளுக்கு மக்கள் வங்கியின் மன்னார் கிளை ஊடாக காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

கமநல காப்புறுதி சபையின் காப்புறுதி நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்கள் உதவி பணிப்பாளர் ஊடாக வழங்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் காணி, மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் - நானாட்டான், மன்னார், மாந்தை மேற்கு,உதவி பிரதேச செயலாளர்கள் - மன்னார் நகரம், மாந்தை மேற்கு,

உதவி மாவட்ட செயலாளர்,கமநல காப்புறுதி சபை உதவி பணிப்பாளர், நீர்ப்பாசனப் பணிப்பாளர் மன்னார், விவசாய திட்ட முகாமையாளர் மற்றும் தலைவர், பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர், முருங்கன், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், மன்னார், பிரதி விவசாயப் பணிப்பாளர், உயிலங்குளம், பிரதிப் பணிப்பாளர், கால்நடை அபிவிருத்தி திணைக்களம், உதவிப் பணிப்பாளர், வங்கிகள் அலுவலர்கள், கமத்தொழில் காப்புறுதி சபை, திட்ட முகாமைத்துவக் குழு அங்கத்தவர்கள், விவசாய அமைப்புகளின் அங்கத்தினர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.










மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2025 /2026 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கை தொடர்பில் அரச அதிபர் தலைமையில் முன்னோடிக் கூட்டம். Reviewed by Vijithan on October 22, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.