அண்மைய செய்திகள்

recent
-

ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை

நீதிமன்றத்தில் சரணடைந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை முன்பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவு பிறப்பித்தார்.

பிடியாணை பிறப்பிக்கப்ப்டடிருந்த ஞானசார தேரர், இன்று முற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் கடந்த 15 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம் தேரரை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்திருந்தது.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் நான்காம் திகதி வட்டரெக்க விஜித்த தேரரின் ஜாதிக்க பல சேனா அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குழப்பத்தை விளைவித்தமை, இஸ்லாம் மார்க்கத்தையும் அல் குர்ஆனையும் அவமதித்தமை தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மேலும் ஏழு தேரர்களுக்கு எதிராக கம்பனித்தெரு பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஆஜராகத் தவறியதன் காரணமாகவே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தேரர் நீதிமன்றத்திற்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பொதுபல சேனா அமைப்பின் ஆதரவாளர்களும் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஞானசார தேரர் முன்பிணையில் விடுதலை Reviewed by NEWMANNAR on June 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.