அண்மைய செய்திகள்

recent
-

மன்­னார் தட்­சணா மரு­த­மடு ம .வி மாணவி பிரி­யங்கா 3 தங்­கப் பதக்­கத்­தை­க் கைப்­பற்­றி­யுள்­ளார்.

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வய­துக்­குட்­பட்ட பெண்­கள் பிரி­வில் மன்­னார் தட்­சணா மரு­த­மடு மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­ வம் செய்த பா.பிரி­யங்கா 400 மீற்­றர் சட்­ட­வேலி, 800 மீற்றர், 1500 மீற்­றர் போன்­ற­வற்­றில் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நடை­பெற்று வரு­கின்­றது.

மன்­னார் தட்­சணா மரு­த­மடு மகா வித்­தி­யா­ல­யத்தை பிர­தி­நி­தித்­து­வம் செய்த பா.பிரி­யங்கா 400 மீற்­றர் சட்­ட­வேலி ஓட்­டத்­தில் 1:13:6 செக்­கன்­க­ளில் ஓடி­யும், 800 மீற்­றர் ஓட்­டத்­தில் 2 நிமி­டம் 37 செக்­கன்­க­ளில் ஓடி­யும், 1500 மீற்­றர் ஓட்­டத்­தி­லும் தங்­கப் பதக்­கத்­தை­க் கைப்­பற்­றி­யுள்­ளார்.

மூன்று தங்­கப்­ப­தக்­கங்­க­ளைக் கைப்­பற்­றி­யமை தொடர்­பில்  வழங்­கிய பிரத்­தி­யெக செவ்­வி­யில், ‘‘எனது பாட­சாலை தேசிய மட்­டத்­தில் எது­வித பதக் கத்­தை­யும் பதிவு செய்­ய­வில்லை. அதற்­காக போராடி வரு­கின்­றேன்.

எனது இலட்­சி­யம் பிர­தேச செய­லா­ள­ராக வரு­வது. கல்­விக்கு இடை­யூறு இல்­லா­மல் எனது விளையாட்டைத் தொடர்ந்து வரு­கின்­றேன். எனது அண்ணா எனக்­கான உத­வி­க­ளைச் செய்து வரு­கின்­றார்.

கடந்த வரு­டம் நடை­பெற்ற வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் மேற்­கு­றித்த நிகழ்ச்­சி­ யில் புதிய சாத­னையை பதிவு செய்­துள்­ளேன். இந்த ஆண்டு வய­துப் பிரிவு மாற்­றத்­தால் சாதனை படைக்­க இய­லா­மல் போனது. எனி­னும் தங்­கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­துள்­ளேன்.

எமது கல்­லூ­ரி­யில் தடை தாண்டல் உப­க­ர­ணங்­கள் இல்லை. பிர­தேச செய­ல­கத்­தி­லி­ருந்தே உதவி பெற்று பயிற்சி எடுத்து வரு­கின்­றேன். ஒவ்­வொரு பாட­சா­லைக்­கும் தகுந்த உப­க­ர­ணங்­கள் வழங்­கி­னால் அவர்­க­ளும் சாத­னை­யா­ளர்­க­ளாக மாறு­வார்­கள்.

என்னை சாதனை வீராங்­க­னை­யாக மாற்­றிய எமது பாட­சா­லை­யின் உடற்­கல்வி ஆசி­ரி­யர் ஜெ.எம்.அருள்­ராஜ் மற்­றும் அதி­பர் பாட­சாலை சமூ­கம் ஆகி யோருக்கு நன்றி தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்’’ எனத் தெரி­வித்­தார்.

பிரி­யங்கா கடந்த வரு­டம் நடை­பெற்ற தட­க­ளத் தொட­ரில் மூன்று போட்­டி­க­ளில் கள­மி­றங்கி மூன்­றி­லும் சாத­னை­யு­டன் தங்­கப்­ப­தக்­கம் கைப்­பற்­றி­யமை குறிப்­பி­டத் தக்­கது.
மன்­னார் தட்­சணா மரு­த­மடு ம .வி மாணவி பிரி­யங்கா 3 தங்­கப் பதக்­கத்­தை­க் கைப்­பற்­றி­யுள்­ளார். Reviewed by NEWMANNAR on July 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.