அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில்......யாழ்.நீதிபதி இளஞ்செழியனுக்கு ஆதரவாக....



யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பம் ஏற்றுக்கொள்ள முடியாத தொன்று எனவும் குறித்த சம்பவத்தை  வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தின் தெரிவித்தார்.

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை (24) மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணிகள் மன்றுக்குச் செல்லாது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தின் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,

சனிக்கிழமை மாலை நல்லூரிலே நீதவான் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து இன்று திங்கட்கிழமை(24) மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லாது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம்.

குறிப்பாக குறித்த சம்பவம் துக்ககரமானதும் ஏற்றுக்கொள்ள முடியாத தொன்றாகும்.நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள சவாளாகவும்,சுதந்திரமான நீதித்துறையை நடாத்த விடாமல் தடுக்கின்ற ஒரு நிகழ்வாகவும் நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த சம்பவத்திலே ஒரு பொலிஸ் சாஜன் உயிரிழந்துள்ளார்.அவருடைய குடும்பத்தினருக்கு மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்ளுவதோடு குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பொலிஸ் சாஜன் விரையில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

நடந்த சம்பவத்தை அவதானிக்கின்ற போது பொலிஸார் அவசரப்பட்டு முறண்பாடான அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் நீதிபதி இளஞ்செழியன் அவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இல்லை என அவர்கள் தெரிவித்த கருத்தை மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதனை நாங்கள் ஏற்பதற்கும் தயாராக இல்லை.உரிய முறையில் விசாரனை செய்து உரிய கண்டு பிடிப்புக்களின் மூலமாக குறித்த சம்பவத்துடன் ஈடுபட்டவர்கள்  நீதியின் முன் கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம் பெறுகின்ற வழக்குகள் சம்மந்தமாக ஒரு பதற்றமான ஒரு சூழலில் பலர் கைது செய்யப்பட்டு யாழ் நீதிமன்றத்தில் விசாரனைகள் இடம் பெற்று வருகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

-யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் மிக துனிச்சல் மிக்க ஒரு நீதிபதியாக கடமையாற்றுகின்றார்.அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துன்பகரமான குறித்த சம்பவம் ஏன் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பில் உரிய முறையில் கண்டு பிடிக்கப்பட வேண்டியது நீதித்துறை, சட்டத்துறை மற்றும் அரசாங்கத்தினதும் கடமையாகும்.

-குறிப்பாக பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் எழுந்தமானமான கருத்துக்களை கூறாமல் சாரியான முடிவுகளை வெளிப்படுத்தி சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம்.

-நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட் வேண்டும்.நீதிபதிகளுக்கு பாதுகாப்பளிக்கப்பட வேண்டும்.அவர்கள் அச்சமற்ற முறையில் தமது கடமைகளை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.யாருடைய அழுத்தத்திற்கும்,உந்து சக்திகளுக்கும் அடி பனியாதவர்களாக நடப்பதற்கு உரிய சகல விதமான முன் முயற்சிகளையும் சம்மந்தப்பட்ட தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என்று மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கின்றறோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.



மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில்......யாழ்.நீதிபதி இளஞ்செழியனுக்கு ஆதரவாக.... Reviewed by Author on July 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.