அண்மைய செய்திகள்

recent
-

பேசாலை காட்டாஸ்பத்திரி பொதுமயானத்திற்கு பாதை வருமா…….???

மன்னார் பேசாலை காட்டாஸ்பத்திரி கிராமத்தில் கிட்டதட்ட 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு இந்துக்கள் முஸ்லீம் றோமன்கத்தோலிக்கம் கத்தோலிக்கசமயமல்லாத இருசபைகளும் உள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் எந்தவிதப்பிரச்சினையும் இன்றி ஆனால் முஸ்லீம்கள் தவிர்ந்து ஏனைய நான்கு சமயத்தவர்களுக்குமான இறுதிக்கிரிகைகள் செய்யும் (சுடலை பொதுமயானம் சேமக்காலை) காட்டாஸ்பத்திரியில் இருந்து 03மைல் தூரத்தில் உள்ளது.

பொதுமயானத்திற்கும் காட்டாஸ்பத்திரிக்கும் உள்ள 03மைல் தூரமானது பாதை புதைமணலாகவும் கள்ளுமுள்ளுகள் நிறைந்த வீதியாகவும் காட்சியளிக்கின்றது. அத்தோடு காட்டுப்பகுதியாகவும் உள்ளது பொதுமயானத்திற்கு போகும் பாதைதான் படுமோசமாக இருக்கின்றது என்றால் பொதுமயானமும் குப்பையும் கூழமாகவும் கள்ளும் முள்ளும் துப்பரவற்ற முறையிலேயே உள்ளது….

இறந்தவர்களின் இடங்கள் இப்படி இருப்பது நல்லதா….
அது எந்த சமயத்தினராக இருந்தாலும் ஆத்துமாக்கள் ஒன்றுதானே…


அப்படியிருக்க ஏன் இந்த வேறுபாடு பாகுபாடு அங்கு தற்போது
 காணிப்பிரச்சினை நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளதாகவும் அந்த தீர்ப்பு வரும்வரை இப்படித்தான் இருக்கும் என்று சொல்கின்றார்கள் (பூர்வீககுடிகள் வந்தேறுகுடிகள் அதாவது விலைக்கு காணிவேண்டி குடிவந்தவர்கள்) சிறித்தோப்பு கிராம மக்களிடம் இருந்து காட்டாஸ்பத்திரி பேசாலை  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சபையினரும் அன்னைவேளாங்கன்னி பங்கு மக்களும் உதயபுர மக்களும் கத்தோலிக்கரல்லாத இருசபைகளும் பணம் கொடுத்தே (பொதுமயானத்துக்கான சேமக்காளைக்கான) காணிகளை வாங்கியுள்ளனர்.
பாதைக்கான இடத்திற்கு சிறித்தோப்பு மக்களும் பேசாலை காட்டாஸ்பத்திரி மக்களும் இணைந்து தான் காணிகளை விட்டுக்கொடுக்கவேண்டும் இவைதவிர வேறுகாரணங்கள் இருந்தாலும்… தற்போதைய பிரச்சினை என்னவென்றால்….

இறந்தவர்களை அடக்கம் செய்யக்கொண்டு போகும் இடமானது துப்பரவாகவும் பாதையானது சிறந்தமுறையிலும் செப்பனிட்டு இருக்கவேண்டும் அல்லவா…இந்த பாதையானது மிகவும் மோசமாகவுள்ளது. ஒவ்வொரு நல்லடக்கம் செய்யப்போகும் போது மக்கள் பெரும்சிரமத்திற்கு ஆளாகின்றார்கள்.(இறந்தவர்களை அடக்கம்செய்யப்போகும் போது இவர்களும் இறக்கின்றார்கள் கொளுத்தும் வெயிலும் தூரமும்)
  • பொதுமயானத்திற்கான பாதை அமைக்கவேண்டும்
  • பொதுமயானம் துப்பரவு செய்தல் வேண்டும்
  • பொதுமயானத்தில் சிறிய அமைவிடமாவது இருக்க வேண்டும். அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவை எதுவுமே இல்லாத காட்டாஸ்பத்திரி பொதுமயானம் மன்னார் பேசாலை பிரதேச சபையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் இணைந்து உடனடியாக நல்ல தீர்வினை முன்வைக்க வேண்டும் என்பது காட்டாஸ்பத்திரி மக்களின் வேண்டுகோளும் எதிர்பார்ப்புமாகும்.

நிறைவேற்றப்படுமா….மக்களின் எதிர்பார்ப்பு…..

மக்களின் பிரச்சினையை வெளிப்படுத்தும் நியூமன்னார் இணையம் அடுத்தமுறை……
 











பேசாலை காட்டாஸ்பத்திரி பொதுமயானத்திற்கு பாதை வருமா…….??? Reviewed by Author on May 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.