அண்மைய செய்திகள்

recent
-

மடுவில் யாஸ்திரியர்களுக்கிடையில் மோதல்-(படங்கள் )

மடு திருத்தளத்தில் தங்கியிருந்த யாஸ்திரியர்களுக்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் ஏற்பட்டுள்ள தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு தமிழ்,சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல்,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

மடு திருவிழாவிற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்ததோடு அதிகலவான பக்தர்கள் தற்காலிக குடிசைகளை அமைந்து அங்கு தங்கி வந்தனர்.

இந்த நிலையில் இன்று (2) ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மற்றும் கலாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சில யாத்திரிகர்களுக்கிடையில் மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரிடம் கலாவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொலைபேசி இலக்கத்தை பலவந்தமாக கேட்டமையினால் குறித்த மோதல் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதன் போது யாழ்ப்பாணம் மற்றும் தலாவத்தை பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
-மோதலில்  ஈடுபட்ட சிலர் மது போதையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக விரைந்து செயற்பட்ட மடு பொலிஸார் யாழ்ப்பாணம் மற்றும் கலாவத்தை பகுதிகளைச் சேர்ந்த சிலரை கைது செய்துள்ளனர்.

தற்போது மடு பகுதியில் பொலிஸார் அதிகலவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மடுவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 
மடுவில் யாஸ்திரியர்களுக்கிடையில் மோதல்-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on July 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.