அண்மைய செய்திகள்

recent
-

திரு.வி. கல்யாணசுந்தரனார் பிறந்த நாள் (26-8-1883)...இன்றைய நாளில்....


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் விருத்தாசல முதலியார்- சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார்.

திரு.வி. கல்யாணசுந்தரனார் பிறந்த நாள் (26-8-1883)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் விருத்தாசல முதலியார்- சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.

கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியர் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களுக்கு மூன்று ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்தது. பச்சையம்மாள்  இறந்த பின் சின்னம்மாள் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு ஆண், நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன. இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்.

தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னை ராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர், 1894-ல் வெஸ்லி பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் மூடங்கின. இதனால் பள்ளிப் படிப்பு சிறிது காலம் தடைப்பட்டது.

படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார். 1904-ம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது. வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார். கதிரவேற்பிள்ளை நீலகிரிக்குச் சென்ற பொழுது அங்கு காலமானார்.

அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ் மற்றும் சைவ நூல்களையும் பாடம் கேட்டார். 1906-ம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார்.

பின்னர் 1909-ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918-ம் ஆண்டிற்குள் தம் மனைவி, பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியரானார். ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார். பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார். தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1768 - கேப்டன் ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தார்.

* 1795 - திருகோணமலையின் பிரெடரிக் கோட்டையை ஸ்டுவர்ட் தலைமையிலான பிரிட்டன் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.

* 1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரெஞ்சு மற்றும் பிரிட்டானியர்களாகல் முற்றுகைக்குள்ளானது.

* 1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனிப் படைகள் ரஷ்யாவை டனென்பேர்க் போரில் தோற்கடித்தன.

* 1920 - ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

* 1942 - உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர்.

* 1957 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணையைத் தாம் சில நாட்களுக்கு முன் பரிசோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.

* 1972 - 22-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனி, மியூனிக்கில் ஆரம்பமானது.

* 1978 - முதலாவது அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக பதவியேற்றார்.

* 1978 - முதலாவது ஜெர்மனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.

* 1993 - யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

* 1997 - அல்ஜீரியாவில் 60-க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

* 2006 - திருகோணமலை மூதூர் கிழக்கில் ஸ்ரீலங்கா விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகினர்.

பிறப்புகள்:-

* 1880 - கியோம் அப்போலினேர், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1918)

* 1883 - திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர் (இ. 1953)

* 1927 - அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் (இ. 1989)

* 1933 - வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்து தவில் கலைஞர் (இ. 1978)

* 1934 - ஏ. ஜே. கனகரட்னா, ஈழத்து இலக்கியவாதி (இ. 2006)

* 1952 - பொன். சிவகுமாரன், ஈழ விடுதலைப் போராட்டத்தில் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது போராளி (இ. 1974)

* 1956 - மேனகா காந்தி, இந்திய அரசியல்வாதி
திரு.வி. கல்யாணசுந்தரனார் பிறந்த நாள் (26-8-1883)...இன்றைய நாளில்.... Reviewed by Author on August 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.