அண்மைய செய்திகள்

recent
-

இந்திய சுதந்திர தினத்தில் கண்ணீர் விட்ட அந்தக் கணம்....


இந்திய தேசத்தின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
70 ஆண்டு கால சுதந்திரத்தில் இந்தியா சாதித்தவை என்பவற்றுக்கு அப்பால், ஒன்று பட்ட பாரத பூமியாக இந்தியா இன்றும் கட்டுக் கோப்புடன் திகழ்வது அற்புதமானது.

இந்திய சுதந்திர தின நிகழ்வுக் கொண்டாட் டங்கள் இந்தியத் தூதுவராலயங்கள் இருக்கக்கூடிய நாடுகளிலும் நடந்துள்ளன.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருக் கக்கூடிய இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் காலை, மாலை என சுதந்திர தின நிகழ்வுகள் நடந்தன.

இதில் மாலை மஞ்சுநாத் சகோதரர்களின் வயலின் இசையோடு சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.
இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிப்  பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பேராசிரியர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தலைமையுரையாற்றிய இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன்; இந்தியாவின் முன் னேற்றம், உணவு உற்பத்தியில் கண்டுள்ள தன்னிறைவு, விண்வெளி ஆராய்ச்சி எனப் பல விடயங்களை எடுத்துரைத்த பின் நான் ஒரு இந்தியன் என்று கூறுவதில் பெருமை அடைகின்றேன் என்றார்.
இந்தியாவின் சனத்தொகைப் பெருக்கம் உங்கள் நாட்டுக்கு பாதகமாக இல்லையா? என்று சிலர் கேட்கின்றனர்.

ஆனால் எங்கள் சனத்தொகைப் பெருக் கத்தை எங்கள் பலமாகவும் செல்வமாகவுமே இந்திய தேசம் பார்க்கிறது என்றார்.
இறுதியாக இந்தியாவின் ஒற்றுமையின் பலம்பற்றிக் கூறிய அவர், ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இந்திய நலனில் ஒன்றுபடும்  பண்பாடு பற்றிக் கூறிய போது, நம் இதயம் அடைத்துக் கொண்டது.
அந்த நிகழ்ச்சி நடந்த அந்த மண்டபத்தைப் பார்த்தேன். வட்ட மேசையைச் சுற்றிவர இருந்த கதிரைகளில் ஒவ்வொரு பிரிவாக நம்மவர்கள் இருந்தனர்.

முதலமைச்சருக்கு அருகில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இருந்தராயினும் இருவரும் அளவளாவிக் கதைத்ததைக் காண முடியவில்லை.
ஆக, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பகையுணர்வு கொண்டவர் களாக இருந்ததைக் காண முடிந்தது.

இதைப்பார்த்தபோது உண்மையிலேயே இதயம் கனத்துக் கொண்டது.
ஒரு பெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்தி உலகம் முழுவதையும் எங்கள் பக்கம் திருப்பிய ஈழத் தமிழினத்தின் இன்றைய நிலைமை இதுதானா?

எத்தனை தியாகங்கள், எத்தனை உயிரிழப் புக்கள், எத்தனை அழிவுகள் இவற்றின் பிற்பாடு இப்படியயாரு அரசியல் சூழ்நிலைதான் எங்களுக்குக் கிடைத்ததா? என்று நினைத்த போது, கன்னத்தின் ஓரங்கள் நனைந்து கொண்டன.

இருந்தும் அங்கு நடந்த மஞ்சுநாத் சகோ தரர்களின் இசை மழையில் நனைந்ததால் கன்னத்தின் ஓரமாய் உப்பு நீர் ஓடியதை மற்ற வர்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம்.
இறைவா! எங்களிடமும் ஒற்றுமை ஏற் படுமா? அல்லது எல்லாத் தியாகங்களையும் மறந்து எங்கள் சொந்த நலனோடு எங்கள் சீவியம் முடியுமா?
-நன்றி-வலம்புரி -

இந்திய சுதந்திர தினத்தில் கண்ணீர் விட்ட அந்தக் கணம்.... Reviewed by Author on August 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.