அண்மைய செய்திகள்

recent
-

இந்தோனேசியா கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.


இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளிவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்தியில், இந்தோனேசியா, Bengkulu மாகாணம் மேற்கு பகுதியில் 73 கிமீ தொலைவில், கடலுக்கு அடியில் 35 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகாத நிலையில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா எனத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. Reviewed by Author on August 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.