அண்மைய செய்திகள்

recent
-

புத்தளம் இலவங்குளம் பாதையிலுள்ள பாலங்களை அமைக்க மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு அனுமதி

புத்தளத்திலிருந்து இலவங்குளம் வழியாக மன்னார்ப் பாதையை மக்களின் போக்குவரத்தை இலகு படுத்தும் வகையில் அந்தப்பாதையிலுள்ள 4 பாலங்களையும் புனரமைப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று (3) வியாழக்கிழமை மாலை 2 மணியளவில் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற போது மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் றிஸாட் பதியுதீன் கொண்டு வந்த யோசனையை ஏற்றுக் கொண்ட மாவட்ட அபிவிருத்திக்குழு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இது தொடர்பாக மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஒப்படைத்தது.

-மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பக்குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவின் நெறிப்படுத்தலில் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண அமைச்சர்களான பா.டெனிஸ்வரன், பா.சத்தியலிங்கம்,மாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,றிப்கான் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் றிஸாட் பதியுதீன் கொண்டு வந்த யோசனையை ஏற்றுக் கொண்ட மாவட்ட அபிவிருத்திக்குழு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இது தொடர்பாக மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஒப்படைத்தது.


வடமாகாணத்துக்கும் தென்னிலங்கைக்கு மிடையிலான போக்குவரத்தை இலகு படுத்த இந்தப்பாதை பயன்தருமென்பதால் இதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

தற்போது புத்தளத்திலிருந்து இலவங்குளம் வழியாக இரு மருங்கிலும் துப்பரவுப்பணிகள் இடம் பெற்று வருவதாகவும் மன்னார் உப்பாறுவரை இந்தத்துப்பரவுப்பணிகளை சீர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

வெளிநாடுகளில் மேற்கொள்வது போன்று 'கிரவலிங் காபட்' முறையின் மூலம் இலவங்குளப்பாதையை செப்பனிடுவது சிறந்தது என்றும் அமைச்சர் றிஸாட் பதியுதீன்ஆலோசனை வழங்கினார்.

பறயனாலங்குளம் - வவுனியா பாதை, நேரியகுளம் - நெளுக்குளம் பாதை, மற்றும் தலை மன்னார் பாதை ஆகிவற்றையும் புனரமைப்புச்செய்ய வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த வேளையில் அங்கு கருத்துத்தெரிவித்த மாகாண வீதி அதிகார சபைப்பணிப்பாளர் வவுனியா - பறயனாளங்குளப்பாதை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் திட்டம்2019 ஜனவரி மாதமளவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்த போது , அதுவரையில் மக்களை அந்தரிக்க விட முடியாதே எனக்குறிப்பிட்ட அமைச்சர் றிஸாட்பதியுதீன் விரைவில் இவ்வாறான வீதிகளை மக்கள் பயணஞ்செய்யக்கூடிய வாறான வகையிலாவது புனரமைப்புச்செய்து கொடுப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்வரவேண்டுமென வலியுறுத்தினார்.

இந்தக்கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நீர்ப்பிரச்சினை, காணிப்பிரச்சினை, சுகாதாரப்பிரச்சினை, வீட்டுத்திட்டப் பிரச்சினை மற்றும் வனபரிபாலனத்திணைக்களத்தினால் வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்ட காணிகள் தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டு மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.இதன் போது திணைக்களத்தின் தலைவர்கள்,பிரதேசச் செயலாளர்கள்,பொலிஸ்,கடற்படை உயரதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








புத்தளம் இலவங்குளம் பாதையிலுள்ள பாலங்களை அமைக்க மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு அனுமதி Reviewed by NEWMANNAR on August 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.