அண்மைய செய்திகள்

recent
-

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம் (செப். 15- 1981)

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம் (செப். 15- 1981)
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15-ம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

தமிழ்மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது.

துணை வேந்தர்கள்:

வ. ஐ. சுப்பிரமணியம் (1981 - 1986),
ச. அகத்தியலிங்கம் (1986 - 1989),    
சி. பாலசுப்பிரமணியன் (1989 - 1991),
அவ்வை து. நடராசன் (1992 - 1995),
 கி. கருணாகரன் (1996 - 1999),
கதிர் மகாதேவன் (1999 - 2002),
இ. சுந்தரமூர்த்தி, ம. இராசேந்திரன் (2009- 2011),
ம. திருமலை (10.2.2012 முதல்)

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

* 1835 – சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்
* 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வெர்ஜீனியாவின் ஹார்ப்பர்ஸ் துறையைக் கைப்பற்றினர்.
* 1873 - பிரெஞ்சு- புரூசியப் போர்: கடைசி ஜெர்மானியப் படையினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
* 1916 - முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்தடவையாக டாங்கிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.
* 1935 - ஜெர்மனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.
* 1935 - நாசி ஜெர்மனி சுவாஸ்டிக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது.
* 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவில் பெரும் எண்ணிக்கையான ஜெர்மனிய வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
* 1944 - இரண்டாம் உலகப் போர்: போர் தொடர்பான நிலைப்பாட்டை எடுப்பதற்காக பிராங்கிளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இரண்டாம் தடவையாக கியூபெக் நகரில் சந்தித்தனர்.
 * 1945 - தெற்கு புளோரிடாவிலும் பகாமசிலும் சூறாவளி காரணமாக 366 விமானங்கள் சேதமடைந்தன.
* 1950 - கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் கொரியாவில் தரையிறங்கின.
* 1952 - ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.
* 1958 - நியூ ஜேர்சியில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 58 பேர் பலியானார்கள்
* 1959 - நிக்கிட்டா குருசேவ் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் சோவியத் தலைவர் ஆனார்.
* 1963 - ஐக்கிய அமெரிக்காவின் பேர்மிங்ஹாமில் ஆபிரிக்க- அமெரிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
* 1968 - சோவியத்தின் சொண்ட் 5 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
* 1975 - பிரெஞ்சுத் தீவான கோர்சிக்கா இரண்டு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
* 1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
* 1987 - இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் உண்ணாவிரதம் தொடங்கினார்.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம் (செப். 15- 1981) Reviewed by Author on September 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.