அண்மைய செய்திகள்

recent
-

தூய்மையான 25 கல்வி நிறுவனங்கள் 12 தமிழக கல்லூரிகளுக்கு விருது....


தூய்மையான கல்வி நிறுவனங்களான 12 தமிழக கல்லூரிகளுக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விருது வழங்கினார்.
தூய்மையான கல்வி நிறுவனங்களான 12 தமிழக கல்லூரிகளுக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விருது வழங்கினார்.

தூய்மையான கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் 25 கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் முதலாண்டு விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 3,500 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன. அதில் இருந்து 174 நிறுவனங்கள் தேர்வு செய்து அவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

மாணவர்-கழிவறை எண்ணிக்கை விகிதம், நீர் தூய்மை, குழாய் அமைப்புகள், சமையலறை சுகாதாரம், குப்பை அகற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து முதல் 25 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் முதல் 50 இடங்களில் எந்த அரசு நிறுவனமும் வராததால், அதற்கென தனிப்பிரிவு அமைக்கப்பட்டது.

அதன்படி பல்கலைக்கழகம், கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு கல்வி நிறுவனம் என 4 பிரிவுகளில் மொத்தம் 25 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 12 தமிழக கல்லூரிகள் இடம்பெற்றதன் மூலம் இந்த பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்தது.

இதில் பல்கலைக்கழக பிரிவில் சோனிபட் ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகமும், கல்லூரி பிரிவில் ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் முதல் இடங்களை பிடித்துள்ளன. இதைப்போல தொழில்நுட்ப கல்லூரி பிரிவில் கோவையை சேர்ந்த அமிர்தா விஸ்வ வித்யாபீதம் கல்வி நிறுவனமும், அரசு கல்வி நிறுவனம் பிரிவில் உத்தரகாண்டின் ஜி.பி.பந்த் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் முதலிடங்களை பெற்றுள்ளன.

மேலும் சென்னை ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்லூரி, திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழக கல்வி நிறுவனங்களுக்கும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த தூய்மை விருதுகளை மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.




தூய்மையான 25 கல்வி நிறுவனங்கள் 12 தமிழக கல்லூரிகளுக்கு விருது.... Reviewed by Author on September 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.