அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை தேவையில்லை! - என்கிறார் விக்னேஸ்வரன்


தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் உயி­ரு­டன் இருக்­கும்­வரை மாற்­றுத் தலைமை பற்­றிப் பேசு­வது பொருத்­த­மற்றது என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரிவித்துள்ளார்.

  
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வழங்­கியுள்ள செவ்வி ஒன்றில், ‘தமி­ழர் அர­சி­யல் தரப்­பில் தற்­போது மாற்­றுத் தலைமை வெற்­றி­டம் இருப்­ப­தாக நீங்­கள் நினைக்­கின்­றீர்­களா?’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘இது ஒரு சிக்­க­லான கேள்வி. தமி­ழர் தலை­மைப்­பீ­டம் மக்­கள் கருத்தை அறிந்­த­வர்­க­ளாக இருக்க வேண்­டும்.தான்­தோன்­றித்­த­ன­மாக தாம் நினைப்­பதே சரி என்று நினைத்து அத­னைத் தமி­ழர்­க­ளி­டம் திணிக்க முடி­யும் என்­கின்ற தலை­மைத்­து­வம் எந்­தக் காலத்­தி­லும் நன்மை தராது என்­பது எனது தாழ்­மை­யான கருத்து.தற்­போது நாம் அனை­வ­ரும் சம்­பந்­த­னின் தலை­மைத்­து­வத்­தின் கீழ் இருக்­கின்­றோம். அவர் ஒரு பழுத்த அர­சி­யல்­வாதி. இந்த 84 வய­தி­லும் மிகுந்த நினை­வாற்­றல் கொண்­ட­வர். எங்­கெங்கு என்ன நடந்­தது எனக் கூறு­வார். அவர் உயி­ரு­டன் இருக்­கும்­வரை மாற்­றுத் தலை­மைத்­து­வம் பற்றி கதைப்­பது சரி­யாக இருக்­காது’ என்று பதி­ல­ளித்­தார்.

‘சம்­பந்­தன் அர­சி­யல் தீர்வை மக்­க­ளுக்கு பெற்­றுத்­த­ரு­வார் என்­ப­தில் நீங்­கள் நம்­பிக்கை வைத்­துள்­ளீர்­களா?’

‘எல்­லோ­ரும் பிர­பா­க­ரன் தமி­ழர்­க­ளுக்­கா­னத் தீர்­வைப் பெற்­றுத்­த­ரு­வார் என்று நம்­பி­னார்­கள். அவ்­வாறு பெற்­றுத்­தந்­தரா? இது இறை­வ­னின் ஆணைப்­ப­டியே நடக்­கும். சம்­பந்­தன் தரு­வாரோ, இல்­லையோ எங்­க­ளுக்­குத் தெரி­யாது. ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளால் இயன்ற முயற்­சி­களை எடுத்து வரு­கின்­ற­னர். எல்­லாம் அவன் செயல். இந்த விட­யத்­தில் பல சிக்­கல்­கள் இருக்­கின்­றன. பெரும்­பான்மை மக்­க­ளின் எண்­ணங்­கள், சிறு­பான்மை மக்­க­ளின் எண்­ணங்­கள் போன்­ற­வற்றை நாம் பார்க்க வேண்­டும். சம்­பந்­தன் எடுத்­துத் தரு­வாரா? என்ற கேள்­விக்கு பதில் சொல்ல முடி­யாத நிலை இருக்­கின்­றது. அவர் இயன்ற அளவு முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றார்.அவ­ரால் முடி­யும் முடி­யாது எனக் கூற முடி­யாத நிலை உள்­ளது’ என்­றார் விக்­னேஸ்­வ­ரன்.

சம்பந்தன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை தேவையில்லை! - என்கிறார் விக்னேஸ்வரன் Reviewed by Author on September 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.