அண்மைய செய்திகள்

recent
-

கனடா செல்ல முயற்சித்து வெளிநாட்டில் அனுபவித்த கொடுமைகள்! கிளிநொச்சி பெண்களின் அனுபவம்


இலங்கையில் இருந்து தரகர்கள் மூலம் கனடா செல்ல முயற்சித்த இரு தமிழ் பெண்களின் திகில் அனுபவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கனடா செல்லும் நோக்கில் பயணத்தை மேற்கொண்ட இவர்கள், மூன்றாம் நாடுகளில் சிக்கியிருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் இலங்கையை வந்தடைந்தனர்.

இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பில் இரு பெண்களும் விபரித்துள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த 24 வயதுடைய சலோமி மற்றும் 34 வயதுடைய ஜெனி ஆகிய இருவரும் பெரும் ஆபத்துகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் மீண்டும் இலங்கை வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சலோமி மற்றும் ஜெனி இப்போது இலங்கையில் தங்கள் வீட்டில் இருக்கின்றனர். கனடாவிற்கு மீண்டும் செல்வதற்கான கனவு அவர்களின் வாழ்வில் என்றும் ஏற்படாது என்று ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவர்கள் தொடர்பில் ஊடகம் வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைய,

கிளிநொச்சியில் 24 வயதுடைய சலோமி மற்றும் 34 வயதுடைய ஜெனி அழகுகலை நிலையத்தை நடத்தி வந்துள்ளனர்.

நடுத்தர வர்க்க குடும்ப பெண்களான இவர்களுக்கு, கனடாவில் குடியேற விரும்பம் ஏற்பட்டுள்ளது. காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அவர்கள் வழி நடத்தப்பட்டார்கள். அங்கு அவர்கள் மூன்று மாதங்களும் மூன்று மணி நேரமும் செலவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தனுஷன் என்ற இலங்கையர், இந்த பெண்களை இந்தோனேசியாவிற்கு அனுப்புவதற்கு ஐந்து இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளார். அவர்கள் ஐந்து நாட்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டனர். எனினும் அவர்களுக்கு கனடாவிற்கு செல்ல வேண்டிய தேவையே காணப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் கத்மாண்டுவில் இறக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் Thamel என்ற பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால் அவர்கள் கனடாவுக்கு செல்வதற்கான நம்பிக்கையை இழக்கவில்லை.

குறித்த பெண்களை Thamel பகுதியில் பிஸ்வானாத் என்ற ஹோட்டலுக்கு இன்னுமொரு இலங்கையர் அழைத்து சென்று, ஓரிரு நாட்களில் மீண்டும் வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். எனினும் அவர் திரும்பி வரவில்லை.

Thamel பகுதியில் இவர்கள் ஏன் தங்கியிருக்கின்றார்கள் என்பது உடனடியாக தெரியவரவில்லை. ஆனால், கடத்தல்காரர்கள் இவர்களை காத்மாண்டுவிலிருந்து மூன்றாவது நாட்டிற்கு அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாக நம்பினார்கள்.

“ஹோட்டல் உரிமையாளர் எங்கள் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நாங்கள் வீட்டைப் பற்றி நினைத்துக் அழுதோம்”என்று சலோமி குறிப்பிட்டுள்ளார்.

IOM, CIB மற்றும் சக்தி Samuha என்ற மனித கடத்தல் எதிரான NGO குழுக்களினால் இந்த பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதன் பின்னர் சக்தி Samuha வீட்டில் சில நாட்கள் பாதுகாப்பாக தங்கியிருந்த இந்த பெண்கள் கடந்த வியாழக்கிழமை இலங்கை திரும்பியுள்ளனர்.

இந்த பெண்கள் போன்று கடந்த சில ஆண்டுகளில் பல இலங்கை பெண்கள் காணாமல் போயுள்ளனர். காத்மாண்டுவில் வேறு இலங்கை பெண்களும் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளார்களா? என காத்மாண்டுவில் இருந்து வெளியேறும் போது ஜெனி வினவியுள்ளார்.

இப்போது நாங்கள் எங்கள் ஊருக்கு சென்று திரும்பி அங்கு வேலை செய்கிறோம். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என சலோமி குறிப்பிட்டுள்ளார்.

கனடா செல்ல முயற்சித்து வெளிநாட்டில் அனுபவித்த கொடுமைகள்! கிளிநொச்சி பெண்களின் அனுபவம் Reviewed by Author on September 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.