அண்மைய செய்திகள்

recent
-

வன்னிப்பிரதேச வயற்பண்பாடு ....இலக்கிய ஆய்வு....வை-கஜேந்திரன் -


வன்னிப்பிரதேச வயற்பண்பாடு

நாம் வாழ்கின்ற காலப்பகுதியானது பிறப்போடு தொடங்கி இறப்போடு முடிவடைகின்றது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நாம் சமூகத்தோடும் சகல இனத்தவர்களோடும் வேற்றுமை மறந்து ஒற்றுமையாக வாழவேண்டும் அவ்வாறு நாம் வாழ்கின்ற வாழ்வு காலங்கள் கடந்தும் நிலைத்துநிற்கும். பரந்து வாழுகின்ற மக்கள் பல இனம் மதம் மொழி பண்பாடு கலைகலாசாரமுறை வேறுபாடுகள் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தமது கலைகலாசார விழுமியங்களை பின்பற்றி கடைப்பிடித்து தாமும் அதன் படி வாழவும் சிறப்பை மகத்துவத்தை பிறஇனத்தவர்களுக்கு தெரியப்படுத்தவும் தெளிவுபடுத்தவும் முனைகின்றனர் இது தேவையாகவும் உள்ளது.

தமிழர்களாகிய நமக்கும் மொழி இனம் கலைகலாசார விழுமியங்கள் ஒழுக்கங்கள் வாழ்க்கை முறைகள் போர்த்திறம் ஆட்சியமைப்பு அடங்காபற்று தலைவணங்காமனவலிமை கடல் கடந்தும் வணிகம் என நீண்டதொரு தொன்மை பழமை முதுமை புதுமையான வரலாறு உண்டு. அவ்வாறே ஈழம் என்று நோக்குமிடத்து இன்னும் சிறப்பாக வடக்கு கிழக்க என இருமாகாணங்களாக பிரிக்கப்பட்ட தமிழ்ப்பரதேசத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பபாணம்-முல்லைத்தீவு-கிழிநொச்சி-வவுனியா-மன்னார் என ஐந்து மாவட்டங்களும் “வன்னி” என்றும் கிழக்கு மாகணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை-புத்தளம்-அம்பாறை போன்ற மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்விருமாகாணங்களில் பெரிய வடமாகாணமான வன்னிபெரும்நிலப்பரப்பு என அழைக்கப்படுகின்ற அடங்காப்பற்று வீரத்திற்கும் விவசாயத்திற்கும் விடுதலைப்போரட்டத்திலும் புகழ்பெற்று விளங்கும் வன்னி பெருநிலப்பரப்பின் வயல்வளம் காட்டுவளம் இயற்கையான வாழ்க்கை முறை போன்றவற்றை அதன் சிறப்புக்களை தற்போதைய நவீனத்தால்  மறைக்கப்பட்ட மறுக்கப்படுகின்ற வாழ்வியலை வரலாற்றை வெளிச்சம் போட்டுக்காட்டியதொரு நூல்தான் “வன்னிப்பிரதேச வயற்பண்பாடு”

ஓர் ஆய்வு எனது விமர்சனநோக்கம் எல்லோருக்கும் பிரியோசனமாகும் என எண்ணியவனாக தொடர்கிறேன்.

ஆய்வு என்பது சும்மா வெறுமனே சொற்குவியல்களை கோர்வைப்படுத்தி நேர்த்தியாக்கி நூலாக்குவது அல்ல அது ஒரு தவம் அதற்காக தன்னை அர்ப்பணம் செய்து தியாக மனதுடன் ஆய்வாக எடுத்துக்கொள்கின்ற விடையம் சம்மந்தமாக முழுமையான தகவல்களையும் மரபுரீதியாகவும் காலத்தின் அடிப்படை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி அம்மக்களால் பின்பற்றப்பட்ட பின்பற்றபடவேண்டிய பல விடையங்களை அதன் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும் அதனால் மக்களுக்கு வழிப்புனர்வு ஏற்பட வேண்டும்.

சிலர் தமது பட்டப்படிப்பினை பூர்த்திசெய்து கொள்வதற்காகவும் தங்களின் திறமையினை வெளிப்படுத்திக்காட்டுவதற்கும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் போலல்லாது இவ்வாய்வானது இக்காலத்தில் வெறுக்கப்படுகின்ற ஒதுக்கப்படுகின்ற திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்ற ஒரு இனத்தின் நிலையான தொன்மையான வரலாற்றை அவர்களின் ஆளுமைத்தன்மையை அவர்களின் பண்பாட்டுக்கலாச்சாரத்தை பாரம்பரியத்தை பறைசாற்றி பாராமுகமாய் இருக்கும் மக்கள் மனதில் தமிழ் பாரம்பரிய விளக்கினை ஏற்றி இதயத்தில் தமிழ் பற்றி எரிய செய்யவே“வன்னிப்பிரதேச வயற்பண்பாடு” எனும் தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டுள்ள கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் இவ்வாய்வு நூலில் பல விடையங்களை பகுப்பாய்வு செய்துள்ளார்.

“வன்னிப்பிரதேச வயற்பண்பாடு” எனும் நூலில் தன்னால் எழுதப்பட்ட பதின் மூன்று ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாகவே அமைந்து இருக்கின்றது. வரலாறும் வாழ்வும் எனும் தலைப்பில் வன்னிபெருநிலப்பரபின் எல்லைப்பிரிவு வன்னி என்பதன் பொருள் (காடு-வனம்-நெருப்பு-அக்கினி-) வன்னியர்களின் குலம் தொழில் சின்னம் வழிபாடுகள் புகழ்பெற்ற தலங்கள் கல்வியோடு சுகந்திரத்தனித்தமிழ் இராச்சியமான அடங்காப்பற்றை ஆட்சி செய்த வன்னியர்களில் புகழ் பெற்ற கயிலை வன்னியன் பண்டாராவன்னியன் அடங்காப்பற்று வீரஆட்சி சிறப்பும் 2500 ஆண்டுப்பழமையான வன்னிப்பாரம்பரியத்தை கூறுவதோடு “வயற்பண்பாடு”; “கிராமிய வழிபாடு” “நெற் செய்கை” எனும் தலைப்புகளில் வவுனியாமாவட்டத்தை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டவை கிராமியத் திருமணநடைமுறைகள் வவுனியா மாவட்டத்திற்கு உரியதாக இருப்பினும்  ஏனைய மாவட்டங்களிலும் இதே நடைமுறைகள் உள்ளன வன்னியின் இன்றைய தலைமுறைக்கும் எதிர்காலச்சந்ததிக்கும் எம்மூதாதையரின் வாழ்வை தெரியப்படுத்துவது நமது கடமை அத்தோடு வன்னியோடு சம்மந்தப்படாதவர்கள் வன்னியை அறிந்து கொள்ளவும் உதவும் வகையில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டடுள்ளன.

 விவசாய நடைமுறைகள்  முற்றாக மாறிவிட்டன எருமை மாடுகள் போய். எருத்து மாடுகளும் போய் உழவு இயந்திரம் வந்து விட்டது எமது பல உபகரணங்கள் செயலற்று போய்விட்டன (தாக்கத்தி உப்பட்டி மாவக்கை கட்டக்கந்து சு10டு பொலி பட்டறை கொம்பறை முதலான சொற்களே மறைந்து விட்டன மட்டப்பலகை கெவர்த்தடி தோற்செருப்பு வார்வடம் வேலைக்காரன் கம்பு இன்னும் பலவற்றை இந்தத் தலைமுறை அறியாது நெல்லினங்கள்  காலபோகம் இடைப்போகம் சிறுபோகம் உழுதல் முதல் அரிவு வெட்டுதல் வரை அங்கு பாவிக்கப்படுகின்ற அத்தனை விடயங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களுக்கு மட்டுமன்றி பூச்சி புழுக்கள் பறவைகள் விலங்குகள் என எல்லா ஐPவராசிகளுக்கும் அறிந்தும் அறியாமலும் உபகாரம் செய்யும் தொழில் இப்பயிர்செய்கைத்தொழிலே வேளாண்மை அன்றி வேறில்லை வேளாண்மை என்பதன் பொருளாக ஈகை-உபகாரம்-பயிர்செய்தல் என கழகத்தமிழ் அகராதி குறிப்பிடுகின்றது. இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு என்பது வள்ளுவன் வாக்கு “குளத்து மீன்” வளம் எனும் தலைப்பினுள் வன்னிப்பிரதேசத்தில உள்ள ஊர்கள் பெரும்பாலும் மடு-மோட்டை-குளம்-முறிப்பு-வாய்க்கால்-கட்டு குளத்தோடு அண்டிய குடிமனைகள் இருந்ததோடு குளத்தில் மீன்களை பிடிக்கும் முறை மீனினங்கள் (கெளிறு-குறவை-பொட்டியன்-கணையன்-மயறி-பனையறி-கொக்கச்சான்-வாளை-வரால்-ஒட்டி-ஜப்பான்-மண்விரால்-உழுவை-மாங்கன்-அயிரை-கச்சல்-ஆரல்) இவற்றை சமைக்கும் முறை அதன் சுவை குளத்தின் கொட்டிக்கிழங்கு தாமரைக்கிழங்கு குடிக்க குளிக்க கழுவ மீன் பிடித்து உண்ண மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உயிரினங்களுக்கும் பெரும் பயன்பட்டுள்ளது குளங்களே இக்குளங்களை குத்தகைக்கும் அன்று கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது.


“வேட்டை” எனும தலைப்பில் வயலும் வயல்சார்ந்த மருதநிலமும் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமும் காடும் காடு சார்ந்த முல்லைநிலமும் ஒருங்கே கொண்டமைந்தது வன்னியாகும் இங்கு காட்டில் உள்ள மரங்கள் செடிகள் கொடிகள் பூக்கள கீரைகள் கிழங்குகள் புல்வகைகள்  அத்தோடு ஆடப்பட்டு வந்த வேட்டை முறைகள் (காட்டுக்கோழி-முயல்-பன்றி-மான் மரை உக்குளான் -ஆமை)போன்றவற்றை ஒற்றுமையாக வேட்டையாடி ஒற்றுமையாக பகுத்துண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்த வன்னி மக்களின் இன்றைய நிலை…?

“நாட்டார் பாடல்கள் நாட்டார் பாடல்களின் கல்விச்சிந்தனை கிராமிய விளையாட்டின் அடையாளம் பண்டிப்பள்ளும் குருவிப்பள்ளும்”  என்ற தலைப்புக்களில்  நாடடார் பாடல்களின் வகைகள் அதன்வேறுபாடுகள் சொற்சிறப்புக்கள் கல்விக்கான இலகுவான அணுகுமுறைகள் மொழிப்பயிற்சி உச்சரிப்பு ஒழுக்கக்கல்வியினையும் விளையாட்டோடு கல்வியினையும் நாட்டார்பாடல்களின் சிறப்பு என்பனவும் பள்ளுப்பிரபந்தங்களின் சிறப்பினையும் நாட்டின் வரலாற்றினையும் ஒரு இனத்தின் வரலாற்று பூர்வீகத்தினையும் அறிய அவர்களால் பாடப்பட்ட நாட்டார்பாடல்கள் பள்ளுப்பிரபந்தங்கள் மூலம் அறியலாம் வன்னியின் பண்பாட்டுவிழுமியங்களை பறைசாற்றி நிற்கின்றன.


“வவுனியா மாவட்டத்தில்
கல்வி வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கியம் எனும் இரு தலைப்புகளில் வவுனியா மாவட்டத்தின் கல்வி கலை இலக்கியம்” பற்றி அறியவிரும்புபவர்களுக்கு வவுனியாவின் தோற்றம் கல்வி வளர்ச்சி பழையபாடசாலைகள் வழிபாட்டுத்தலங்கள் இடப்பெயர்வுகள் முன்னும் பின்னும் வளர்ச்சி எழுச்சி என்பனவற்றை எடுத்துக்கூறுவதோடு இலக்கியம் சார்ந்த நூல்வெளியீடுகள் இறுவட்டு-குறும்படவெளியீடுகள்-நாட்டிய அரங்கேற்றங்கள்-இசைத்துறை-சிற்பத்துறைகளோடு இலக்கியத்தினை வளர்க்கும் அமைப்புககள் பெண்எழுத்தாளர்கள் இதுவரை விருதுகள் பெற்ற கலைஞர்கள் கல்வி மான்கள் சான்றோர்கள் பெரியோர்கள் வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு கடமைபுரிந்தவர்கள் இருப்பவர்கள் இறந்தவர்கள் என எல்லோரினையும் அவர்களின் சேவைகள் சிறப்புக்களை தொகுத்து தந்துள்ளார் வன்னிப்பிரதேச வயற்பண்பாடு எனும் நூலாக…
இவ்வாய்வு நூலானது வன்னிப்பிரதேச வயற்பண்பாடு வன்னிமக்களின் பழமையான பாரம்பரிய வாழ்வியலை கலைகலாசார முறைகளை ஓழுக்கம் வீரத்தின் திறம் சடங்கு சமயசம்பிரதாயங்களை எமக்கு எடுத்துச்சொல்லுகின்றது.

வன்னிமண்ணின் பெருமையையும் சிறப்பையும் தனது ஆளுமைக்கு உற்படுத்தி பதின்மூன்று தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஆழமான சிந்தனையோடும் அக்கருத்தின் உண்மைத்தன்மையை ஆண்டு ரீதீயாகவும் அறிஞர்கள் எழுதிய நூல்கள் கல்வெட்டுக்கள் அடிக்குறிப்புக்கள் ஒப்பீட்டுமுறையில் சங்ககால நூல்களில் இருந்தும் துள்ளியமாக தொகுத்து பகுத்து வியத்தகு நூலாக வன்னிப்பிரதேச வயற்பண்பாடு நூலைத்தந்துள்ளார்.

சிறப்பாக இலங்கையின் வன்னி மாவட்டங்கள் ஒரு ககையேடு(வவுனியா-முல்லைத்தீவு)என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிடும் போது மொழிபெயர்ப்பு வெளியீட்டுக்குழுவின் இணைச்செயலாளர்களில் ஒருவராக இருந்துள்ளார்.

இளையதலைமுறையினராகிய
நாம் இன்னும் எமது பாரம்பரியத்தை பண்பாட்டுஒழுக்கத்தை ஓழுங்காக முழுமையாக அறிய முயல்வதில்லை... இன்னொரு மொழியை இன்னொருவனின் கலாச்சாரத்தினை தூக்கிப்பிடித்து அதன் பின்னாலே அலைந்து திரிகிறோம். அந்நியனை அன்போடு அழைக்கிறோம் அன்னைமொழியை அழகு நாட்டை அழியாத பாரம்பரியத்தை அடியோடு மறந்தவர்களாய் பேயாய் அலைகிறோம் அந்நியவர்கள் சொல்லித்தான் அறிந்து கொள்ள வேண்டிய அவலநிலை… அவ்வாறன சந்தர்ப்பங்களில் இவ்வாறான நூல்கள் எம் கன்னத்தில் அறைந்து உண்மையை உறைக்க உரக்கச்சொல்ல தவறுவதில்லை இவ்வாறான பல நூல்கள் இன்னும் பல வரவேண்டும் அப்போதுதான் எமது பாரம்பரியமும் பண்பாடும் அழியாமல் ஆண்டாண்டு காலம் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம்.

இவ்நூலாசிரியரின் பின்புலம் எமக்கு எந்தவித ஐயப்பாடும் இல்லை காரணம் தழிழுக்காகவே தன்னை அர்பணித்து வாழும் கலைப்பொக்கிசமான தமிழ்மணி அகளங்கன் (ந.தர்மராஐ) இவர் கணிதபட்டதாரி ஆசிரியர்(டீளஉ) தமிழில் முத்தமிழின் மூழ்கியவராக 44-நாற்பத்திநான்கு நூல்களையும் என்னற்ற படடங்கள் விருதுகள் பரிசுகள் தேசிய விருதுகள் வெளிநாட்டின் இருந்து கௌரவப்பட்டங்கள அத்தூடு வவுனியா மண்ணின் ஒப்பற்ற கலைஞர் கலாநிதி தமிழ்அதர் அகளங்கன் அவர்கள் ஆய்வுக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் ஆட்கொண்டவராய் அதன் மூலம் தனது ஆய்வுப்பணியினை செவ்வனே செதுக்கியுள்ளார். இவ்நூலானது இளையதலைமுறையினர் முதற்கொண்டு ஒவ்வொருவரும் ஒருமுறையேனும் கட்டாயமாக படிக்கவேண்டிய பகிரவேண்டிய பறைசாற்றப்படவேண்டிய நித்திலம் வன்னிப்பிரதேசவயற்பண்பாடு நூல் ஆகும்.

நவீனயுகத்திலும் நம்மூதாதையர் கட்டிக்காத்து விட்டுச்சென்ற உடமையை உரிமையை உணர்வுக்காவியங்களை உயிராய்காப்பதே கடமை நம்மை நெருங்காது மடமை…என்றும் புதுமை.

எனது விமர்சனத்திற்கு இவ்நூலை தெரிவு செய்ததின் நோக்கம் எமது இனம் யுத்தகாலத்திற்கு முன்பே தனது ஆளுமைத்தன்மையால் நிலைத்து நின்று போராடியது வெற்றிக்காவியங்கள் பலவுண்டு காலசுழற்சியும் சு10ழ்ச்சியாலும் வளமான வாழ்வும் இயற்கையான நிலபுலனும் அழிந்து அநாதைகளாக அந்நியநாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றோம். இழந்தவைகள் இழந்தவைகளாகவே இருக்கட்டும் ஆனாலும் நாம் வாழ்ந்த வசந்தகாலங்களை இனிவரப்போகின்ற சந்ததியிராவது அறிந்து அந்நியர்களுக்கு அடிபணியாமல் அகிலத்தை கட்டியாள அன்னைத்தமிழையும் அன்னைநாட்டின் அற்புதத்தினையும் அறிந்து தெளிந்து இருந்தால்தானே இவைகள் சாத்தியமாகும் இதுவே சத்தியம்.

இலக்கியவிமர்சனம் ஆக்கம்- வை-கஜேந்திரன் -
(மன்னார் மாவட்ட 2015 இலக்கியப்போட்டியில் முதலாம் இடம்)







வன்னிப்பிரதேச வயற்பண்பாடு ....இலக்கிய ஆய்வு....வை-கஜேந்திரன் - Reviewed by Author on September 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.