அண்மைய செய்திகள்

recent
-

சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை!

16வய­துக்குகுறைந்தசிறுமியை காத­லித்து பாலியல் வல்லுறவு புரிந்த குற்­றத்­தில் முல்­லைத்­தீவு இளை­ஞன் ஒருவருக்கு வவு­னியா மேல் நீதி­மன்றம் நேற்று 10 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை வி­தித்து தீர்ப்­ப­ளித்­ததுமுல்­லைத்­தீவு, மாங்­குளம், ஒலு­மடு பிர­தே­சத்தைச் சேர்ந்த 23 வய­து­டைய நாக­ராசா ஜெக­தீஸ்­வரன் என்ற இளை ஞன், 2011 ஆம் ஆண்டு ஜூலை மற்று ம் நவம்பர் மாதங்களில் சிறுமி ஒரு­வரை காத­லிப்­ப­தாக கூறி அவரை காத­லித்து ஏமாற்றி பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்தி ஒரு குழந்­தைக்கு தாயாக்­கி­யுள்ளார். அத­னை­ய­டுத்து குறித்த இளைஞன் தன்னை திரு­மணம் செய்வார் என காத்­தி­ருந்த பெண் அவர் வேறு திரு­மணமாகியுள்ளார் என்­ப­தனை அறிந்து பொலிஸில் முறைப்­பாடு தொடுத்துள்ளார்.

இவ் முறைப்­பாட்­டி­னை­ய­டுத்து குறித்த நபரை கைது செய்த முல்­லைத்­தீவு பொலிஸார் நீதிவான் நீதி­மன்­றத்தில் முற்­ப­டுத்­தி­ வழக்கு விசா­ர­ணைகள் முல்­லைத்­தீவு நீதிவான் நீதி­மன்­றத்தில் நடைபெற்றுள்ளது.

கடந்த 24.08.2017 ஆம் திக­தி­யன்று சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் குற்­றப்­ப­கிர்வு பத்­திரம் வவு­னியா மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்டு வழக்கு விசா­ர­ணைகள் நடைபெற்று சாட்­சி­யங்கள் மன்­றினால் பரி­சீ­லிக்­கப்­பட்டு நேற்று27.10.2017 தீர்ப்­பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிர­காரம் குறித்த இளைஞன் 16 வய­துக்­குட்­பட்ட பெண் பிள்­ளையை காத­லிப்­ப­தாக தெரி­வித்து பாலியல் வல்லுறவுக்குஉட்படுத்தியமைக்கு 10 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதித்து தீர்­ப்ப­ளிக்­கப்­பட்­டுள்ளது.


அத்­துடன் பிறந்த குழந்­தைக்கு மூன்று இலட்சம் ரூபா நஸ்­ட­ஈடு செலுத்­து­மாறும்அதை செலுத்த தவறின் 2 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை அனு­ப­விக்க நேரிடுமெனவும் தண்­டப்­ப­ண­மாக பத்­தா­யிரம் ரூபாவை செலுத்­து­மாறும்அதை செலுத்த தவறின் ஒரு மாத சாதா­ரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடுமென தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழ க்கினை நெறிப்படுத்தியிருந்தார்.
சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை! Reviewed by NEWMANNAR on October 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.