அண்மைய செய்திகள்

recent
-

மன்­னா­ரில் 11 இடங்­க­ளி­லும்,வடக்­கில் 48 இடங்­க­ளி­லும்.....மலே­ரியா வகை நுளம்­பு­கள்.


வடக்­கில் மலே­ரியா வகை நுளம்­பு­கள் 48 இடங்­க­ளில் உள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.
அவற்றை அழிப்­ப­தற்­கான இர­சா­யன மருந்­து­கள் உட­ன­டி­யாக வழங்­கப்­ப­டும் என்று கொழும்பு சுகா­தார அமைச்­சின் பொதுச் சுகா­தா­ரத்­துக்­கான பிர­திப் பணிப்­பா­ளர் நாய­கம் மருத்­து­வர் சரத் அமு­னு­கம, யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் தெரி­வித்­தார்.
இலங்­கை­யில் இருந்து மலே­ரியா நோய் முற்­றாக ஒழிக்­கப்­பட்ட நிலை­யில் மலே­ரியா நோயைப் பரப்­பும் நுளம்­பு­கள் வடக்­கில் மீண்­டும் இனங்­கா­ணப்­பட்­டி­ருக்­கின்­றன.அவற்றை உட­ன­டி­யா­கக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சில் நேற்­றுக் கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.

ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மலே­ரி­யா­வைப் பரப்­பும் அனோ­பி­லிஸ் வகை நுளம்­பு­கள் யாழ்ப்­பா­ணத்­தில் 33 இடங்­க­ளி­லும் , மன்­னா­ரில் 11 இடங்­க­ளி­லும், வவு­னி­யா­வில் 4 இடங்­க­ளி­லும் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன என்று கூட்­டத்­தில் கூறப்­பட்­டது.
மன்­னார் மாவட்­டத்­தில் கடந்த டிசெம்­பர் மாதம் இனங்­கா­ணப்­பட்ட இந்த வகை­யான நுளம்­பு­களை அழிக்க இரு கட்­ட­மாக முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

அதன் பெறு­பே­று­கள் தொடர்­பி­லும் நேற்­றைய கூட்­டத்­தில் ஆரா­யப்­பட்­டது. மன்­னார் மாவட்­டத்­தில் முத­லில் 79 இடங்­க­ளில் மலே­ரியா நுளம்­பு­கள் இனங்­கா­ணப்­பட்­டி­ருந்­தன. தற்­போது 11 இடங்­க­ளில் அவை மீண்­டும் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது. மாகா­ணத்­தின் மலே­ரி­யாக் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­கள், வடக்கு மாகாண சுகா­தா­ரத் திணைக்­க­ளப் பணிப்­பா­ளர், மூன்று மாவட்­டங்­க­ளின் சுகா­தார மருத்­துவ அதி­கா­ரி­கள் மற்­றும் தொற்­று­நோய்க் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­கள் எனப் பல­ரும் இந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­னர்.

மன்­னா­ரில் 11 இடங்­க­ளி­லும்,வடக்­கில் 48 இடங்­க­ளி­லும்.....மலே­ரியா வகை நுளம்­பு­கள். Reviewed by Author on October 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.