அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் 2017 புலமைப் பரிசில் பரீட்சையில் 2 ஆம் இடம் வென்ற மாணவனுக்கு "சாதனைச் சூரியன்" கௌரவிப்பு விழா


2017  புலமைப் பரிசில் பரீட்சையில் மடு கல்வி வலயத்தை சேர்ந்த மன்/ கட்டையடம்பன் R.C.T.M.S பாடசாலையை மாணவன் ஞானசேகர் மெல்கிதன் 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 2 ஆம் இடத்தை வென்று கட்டையடம்பன் பாடசாலையையும் மடுக் கல்வி வலயத்தையும் கற்றோரும் மற்றோரும் ஒருக்காய் திரும்பிப் பார்க்க வைத்த சாதனையாளர் கௌரவிப்பு விழா 14/11/2017 செவ்வாய்க்கிழமை மன்/ கட்டையடம்பன் R.C.T.M.S பாடசாலையில் மிக மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழா மன்/கட்டையடம்பன்
 R.C.T.M.S பாடசாலையின் அதிபர் மரியாதைக்குரிய திரு.M.M.லூர்தாகரன் அவர்ளின் நெறியாள்கைமிக்க தலைமையில் பிரதி அதிபர் திரு.இம்மானுவல் பெனில்டஸ் அவர்களினதும் கல்லூரி ஆசிரியர் பெருந்தகைகள் பெற்றோர்கள் மாணவர்கள் என அனைவரினதும் பரிபூரண ஒத்துழைப்புடன் சாதனையாளர் கௌரவிப்பு விழா மிக மிகச் சிறப்பாக நடைபெற்றது

இவ் விழாவுக்கு

பிரதம விருந்தினராக
மன்னார் வாழ்வுதயம், கறிற்றாஸ் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை
ஆ.ஜெயபாலன் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாக


திரு.T.பால்றாஜ்
பிரதிக் கல்விப் பணிப்பாளர்
( நிர்வாகம் )
மடுக் கல்வி வலயம் அவர்களும்

மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர்
தேச கீர்த்தி , தேச அபிமானி
திரு. S.R.யதீஸ் அவர்களும் அவர்தம் பாரியார் அவர்களும்

கௌரவ விருந்தினர்களாக

மன்/தட்சனா மடு ம.வி. அதிபர் திரு.A.ஜெறால்ட் அல்மேடா அவர்களும் மன்/அடம்பன் ம.ம.வி. பிரதி அதிபர் திரு. மரியராஜா நிக்சன் அவர்களும் மன்/சின்னப்பண்டிவிரிச்சான் அ.த.க  அதிபர் திரு.யேசுதாசன் அவர்களும் மன்/பெரிய குஞ்சுக்குளம் R.C.M.V அதிபர் திரு.A.V.ஜெயசீலன் அவர்களும் மன்/மடுறோட் சிங்கள பாடசாலையின் அதிபர் திருமதி.யேசுரெத்தினம் அவர்களும் மன்/தம்பனைக்குளம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் திரு.சிந்தாத்துரை அவர்களும் மன்/பன்னவெட்டுவான் ஆரம்ப பாடசாலையின் அதிபர் திரு.S.நேவிஸ் நிர்மலதாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

அத்துடன் மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தினால் மாவட்டத்தில் 2 ஆம் இடம் வென்ற மாணவன் ஞா.மெல்கிதன்
"சாதனைச் சூரியன்" எனவும்
நகர்ப்புறம் போன்று ரியூசன் வசதிகள் எதுவும் இல்லாமல்  இவருக்கு கற்பித்து சாதனை படைத்த ஆசிரியர் மாணிக்கராசா மதுரன் "சாதித்த சூரியன்" எனவும் ஆசிரியர் மாணவர்களை உற்சாகப் படுத்தி சாதனை படைக்கச் செய்த அதிபர் திரு.M.M.லூர்தாகரன் வர்களுக்கு "கௌரவச் சூரியன்" எனவும் கௌரவமான ஞாபக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

அத்துடன் பாடசாலைச் சமூகத்தினால் ஞாபக சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

எவ்வதமான வெளி வசதிகளும் இல்லாமல் பாடசாலைக் கற்பித்தலை மட்டும் நம்பி சாதனை படைத்த மன்/கட்டையடம்பன் பாடசாலை மாணவனையும் ஆசிரியர்களையும் அதிபர் அவர்களையும் மடுக் கல்வி வலய பணிப்பாளர் திருமதி.மாலினி வெனிற்றன் அவர்களையும் ஏனைய வலயக் கல்வி அலுவலர்களையும்

நியு மன்னார் இணைய குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

































மன்னார் 2017 புலமைப் பரிசில் பரீட்சையில் 2 ஆம் இடம் வென்ற மாணவனுக்கு "சாதனைச் சூரியன்" கௌரவிப்பு விழா Reviewed by Author on November 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.