அண்மைய செய்திகள்

recent
-

இளையராஜா பாடலுக்கு பிரமாண்டமாக செலவு செய்து பாடிய கனடா தமிழர் -


இளையராஜாவை தவிர்த்துவிட்டு தமிழ் இசையை நம்மால் முன்னெடுத்து சொல்ல முடியாது. அவர் செய்த புதுமைகளும் அவரிடமிருந்த இசை செறிவும் தான் தமிழர்களின் இசை ரசனையை மேம்படுத்தியது.

அவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு புள்ளியில் நம் வாழ்வோடு இணையும். தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகில் வாழும் தமிழர்கள் யாவருக்கும் இளையராஜாவின் இசை ஒன்று சேர்கிறது.
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பலரும் தற்போது எடுத்து cover song பாடி வருகிறார்கள். அந்த வரிசையில் நான் கடவுள் திரைப்படத்தின் ஓம் சிவோஹம் பாடலுக்கு மின்னல் மியூசிக் குழு cover song பாடியிருக்கிறார்கள்.
செந்தில் குமரன் மற்றும் பல மேற்கத்திய பாடல் கலைஞர்களும் இந்த cover song பாடலில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி கனடா வாழ் தமிழர்களையும், உலக தமிழர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.

யூடியுப் பாடலுக்காக பெரும் பொருட்செலவில் இப்பாடலை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா பாடலுக்கு பிரமாண்டமாக செலவு செய்து பாடிய கனடா தமிழர் - Reviewed by Author on November 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.