அண்மைய செய்திகள்

recent
-

இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெழிவு படுத்த பகிரங்க விவாதத்திற்கு ஒழுங்கு செய்யுங்கள்-கூட்டமைப்பு தலைமையிடம் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை-(PHOTOS,VIDEO)



இடைக்கால அறிக்கையானது தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய ஆணையில் இருந்தும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்தும் முற்று முழுதாக மாறியிறுக்கின்றது.ஆகவே இந்த இடைக்கால அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதி நிதிகளுடன் சமகால அரசியல் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று  சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,,

எங்களுக்கிடையில் என்ன பிரச்சினை இருக்கின்றது? ஏன் அந்த பிரச்சினை உருவாகியது?அந்த பிரச்சினைக்கு எவ்வகையில் தீர்வு காணலாம் என்பதனை சற்று வெளிப்படையாக நாங்கள் கதைத்தால் மட்டுமே குறித்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

எங்களுக்கிடையில் என்ன பிரச்சினை இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளாமலும்,அதனை நாங்கள் தீர்க்காமலும்,அதைப்பற்றி கதைக்கமால் இருந்து கொண்டு பொதுவாக நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து தேர்தலிலே முகம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எங்களை நாங்களே ஏமாற்றுவது போல் உள்ளது.

பல்வேறு கூட்டங்கள் இடம் பெற்றுள்ள போதும்,எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில் கசப்பான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளது.எனவே எங்களுக்குள் என்ன பிரச்சினை இருக்கின்றது என்பதனை முதலில் வெளிக்கொண்டு வர வேண்டும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரைக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு என்று சொல்லி ஒரு யாப்பு கிடையாது.தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி இல்லை.தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு என ஒரு பொதுவான சின்னமும் இல்லை.இதற்கு அப்பால் கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இருக்கின்றது.

குறித்த நான்கு கட்சிகளும் பல்வேறு தேர்தல்களை சந்திக்கின்றது.மேலும் வெளிநாட்டு ராஜ தந்திரிகளை சந்திக்கின்றோம்

இலங்கை அரசுடன் பல சுற்று பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம்.குறித்த சந்திப்புக்கள், பேச்சுவார்த்தைகளில் ஒரு வெளிப்படைத்தன்மை இல்லை.

தனி மனிதர்கள் ஒரு சில முடிவுகளை எடுக்கின்றார்கள். எதிர்காலத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் இக்கட்சி பதிவு செய்யப்பட வேண்டும்.

-இதற்கு என ஒரு யாப்பு வேண்டும்.பொதுவான சின்னம் இருக்க வேண்டும்.இதற்கு அப்பால் எங்களுக்கு என்று ஒரு கொள்கை திட்டம் இருக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கி போராடிக்கொண்டிருக்கும் போது தமது ஆயுத பலத்திற்கு மேலதிகமாக ஜனநாயக ரீதியான பலம் பாராளுமன்றத்துக்குள், வெளியே,சர்வதேச ரீதியாக இருப்பதற்கு ஏன் அவர்கள் விரும்பவில்லை என்றால் ஒரு கொள்கையின் அடிப்படையிலே அந்த கூட்டு இருக்க வேண்டும்.

அவர்கள் தமிழீழத்துக்காக போராடினார்கள்.2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழீழம் சத்தியமில்லை என்பதற்கு பிறகு நாங்கள் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்தோம்.

-வடக்கு-கிழக்கு இணைந்த அதி உச்ச சமஸ்தி ஆட்சியையும், மத்திக்கும்,மாகாணத்திற்கும் இடையில் இருக்கும் காணி பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் ஏனைய அன்றாட பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வை காண வேண்டும் என்பதன் அடிப்படையில் நாங்கள் ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்து தொடர்ச்சியாக மக்களிடம் அதற்கான ஆணையை பெற்று வருகின்றோம்.

அந்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு அமைவாக நாங்கள் நடக்கின்றோமா? இல்லையா என்று எல்லோறுக்கும் தெரியும்.

-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களின் போராட்டம் இன்று எட்டு(8) மாதங்களை கடக்கின்றது.எந்த ஒரு அரசியல் கட்சிகளினதும் வழிகாட்டல் இன்றி, தலைமை,அலோசனைகள் இன்றி ஒரு தொடர் போராட்டம் 250 நாற்களை கடந்தும் அந்த மக்கள்  மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த மக்களின் பிரதி நிதிகளாக இருக்கின்ற எங்களினால் இன்று வரைக்கும் எங்களினால் கொண்டு வரப்பட்ட அரசாங்கம் அல்லது ஜனாதிபதியுடன் பேசி காணாமல் ஆக்கப்பட்டுள்ள 24 ஆயிரம் பேர் பரனகம ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்துள்ளனர்.

இவர்களில் யாராவது இருக்கின்றார்களா? இல்லையா? என்று இன்று வரை மக்களையும்,ஜனாதிபதியையும் ஒன்று சேர்த்து பதில் கூற முடியவில்லை.

அதே போன்று அரசியல் கைதிகளின் பிரச்சினைகள்,காணி பிரச்சினைகளும் காணப்படுகின்றது.
குறித்த பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் ஏற்கனவே கட்சிக்குள் நிறைய விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.

ஆனால் எவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
 முடிவுகள் எவையும் கூட்டாக மேற்கொள்ளப்படுவதில்லை.கட்சியின் கூட்டம் உரிய முறையில் கூட்டப்படுவதில்லை.

நான்கு கட்சிகளைக்கொண்ட எங்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்புக்குழு இருக்கின்றது.இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் ஒரு கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்படுவதில்லை.

ஒருங்கிணைப்புக்குழு கூடினால் மட்டுமே தீர்மானங்களை எடுக்க முடியும்.குறித்த குழுவை கூட்ட பல மாதங்கள் கடக்கின்றது.அப்படி ஒருங்கிணைப்பு குழுவை கூடினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் எல்லாம் குப்பைத்தொட்டிக்குள் போடப்படுகின்றது.

தற்போதுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாக ஒரு வருட காலமாக அரசியல் வழி நடத்தல் குழுவில் எங்களுடைய கட்சியின் பிரதி நிதிகள் இருவர் குறித்த குழுவில் இருக்கின்றனர்.

ஒரு வருடத்தில் இடம் பெற்ற குறித்த கூட்டம் தொடர்பில்  73 தடவைகள் பேசப்பட்டுள்ளது.

ஒரு கூட்டத்தையாவது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சி நான்கினையும் ஒன்று கூட்டி கதைத்து தீர்மானம் மேற்கொள்ள எங்களினால் ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை காணப்படுகின்றது.

இறுதியாக பாராளுமன்ற குழுவை கூட்டி அதில் தீர்மானம் எடுக்க முயற்சி செய்தார்கள்.கூட்டமைப்பின் தலைவருக்கு நான் கடிதம் எழுதினேன்.

முதலில் எங்களுடைய கொள்கை ரீதியான தீர்மானங்களை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவுடன் பேசி தீர்மானம் ஒன்றை எடுத்ததன் பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள்.ஆனால் இங்கு அனைத்தும் தலைகீழாக நடக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முடிவெடுத்து அதனை அங்கேயே நடைமுறைப்படுத்துகின்ற விடையங்கள் இருக்கின்றது.

இன்றைக்கு இடைக்கால அறிக்கை தொடர்பில் எல்லோறுக்கும் தெரியும்.இந்த நாடு ஒற்றையாட்சி நாடு,பௌத்த நாடு அதனை யாராவது எதிர்க்கின்றீர்களா? என்று பிரதமர் கேட்டார்.

-எனவே இலங்கை முழுவதும் சர்வஜன வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.உங்களுடைய கோரிக்கைக்கும், எங்களுடைய கோரிக்கைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

தெற்கில் இன்று பிரதமராக இருக்கலாம்,ஜனாதிபதியாக இருக்கலாம்,மஹிந்த ராஜபக்ஸவாக இருக்கலாம் மூவரும் சேர்ந்து ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றார்கள்.

இந்த இடைக்கால அறிக்கை தொடர்பில் அவர்களுக்கு எந்த விதமான மாற்று கருத்துக்களும் இல்லாத நிலை தான் இருக்கின்றது.

ஆகவே நாங்கள்  ஒருமை ரீதியாக மக்களிடம் சென்று தேர்தல் விஞ்ஞானத்தை முன் வைத்த அதனூடாக ஆணையை பெற்று இன்று அந்த விடையங்கள் எல்லாவற்றையும் கிடப்பில் போட்டு விட்டு இடைக்கால அறிக்கையில் சமஸ்ரி இருக்கின்றது.அதனை யாரும் குழப்பி விடாதீர்கள்.

நாங்கள் இன்று உங்களிடம் பகிரங்கமாக கேட்கின்றோம் பகிரங்க விவாதத்திற்கு ஒழுங்கி செய்யுங்கள்.தற்போதுள்ள இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கின்றது என்பதனை அனைவருக்கும் பகிரங்கமாக தெரியப்படுத்துவோம்.

1972 ஆண்டு அரசியல் யாப்பினை தந்தை செல்வா தீர்க்க தரிசனமாக கூறினார்.நாங்கள் இந்த அரசியல் யாப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று.

இந்த யாப்புத்தான் எமக்கு பாரிய அழிவை கொண்டு வரப்போகின்றது என்றார்.அவர் கூறியது போல் இன்று 4,5 இலட்சம் பேர் அழிந்து போயுள்ளனர்.

எதிர்வரும் தேர்தலினை வைத்துத்தான் அரசாங்கம் கூறப்போகின்றது.இத்தேர்தல் அரசிற்கு மிக முக்கிய தேர்தலாக அமைந்துள்ளது.

ஒன்றுமில்லாத இடைக்கால அறிக்கையை தமிழ்   மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒன்றுமில்லாத இடைக்கால அறிக்கைக்கு தமிழ் மக்கள் ஆணை தந்திருக்கின்றார்கள் என்று நாங்களும் சொல்லலாம்.அதற்கு பிறகு அரசியல் யாப்பைப்பற்றி,இடைக்கால அறிக்கையை பற்றி நாங்கள் ஒன்றுமே பேச முடியாது.

மக்களிடம் ஆணையை பெற்று விட்டோம்.அதன் பின் நாங்கள் சொல்ல முடியாது இது ஒரு ஒற்றையாட்சி நாடு,இது ஒரு பௌத்த நாடு,பௌத்த மதத்தை பின் பற்றுகின்ற சிங்கள மக்கள் தான் இந்த நாட்டின் முதல் பிரஜைகள்.ஏனையவர்கள் இரண்டாம் பிரஜைகள்.காணி, பொலிஸ் அதிகாரங்கள் எங்களுக்கு இல்லை.

அன்றாட பிரச்சினைகள் எங்களுக்கு இல்லை என தேர்தலில் வாக்களித்ததன் பின்னர் இந்த யாப்பினை ஆதரித்து அதற்கு வாக்களியுங்கள் என்று கூறினால் இதற்கு பின்னர் நாங்கள் போய் இலங்கை அரசாங்கத்தோடு அல்லது சர்வதேச சமூகத்தோடும்  பேச முடியாது.

-எங்களுடைய தலையில் நாங்கலே மண் அல்லிப்போடும் நிலமையே ஏற்படும்.ஆகவே இந்த நிலமைகள் தொடர்பில் நாங்கள் பல தடவைகள் முயற்சி செய்தோம்.எங்களுக்கு ஒரு தலைமை ஒருங்கிணைப்பு குழுவை கூட்டி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என கோரியிறுந்தோம்.ஆனால் எடுக்க முடியவில்லை.

கடைசியாக இடைக்கால அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் எல்லோறுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.ஆனால் எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

எனக்கு பாராளுமன்றத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்காத கட்சியின் தலைவர் எப்படி தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுத்து கொடுக்கப்போகின்றார்?

நாங்கள் அங்கு தமிழீழம் கேட்டா பேசப்போகின்றோம். அல்லது மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் ஆயுதத்தை கையில் எடுங்கள் என்றா பேசப்போகின்றோம்.இல்லை.

இடைக்கால அறிக்கையானது தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய ஆணையில் இருந்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து முற்று முழுதாக மாறியிறுக்கின்றது.

ஆகவே இந்த இடைக்கால அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற விடையத்தையே நான் பாராளுமன்றத்தில் பேச இருந்தேன்.

கடந்த 16 வருடங்களாக நான் கூட்டமைப்பில் இருக்கின்றேன்.எனக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்காத அந்த தலைமை எப்படி மக்களின் உரிமைகளை மதிக்கப்போகின்றார்கள்.

எங்களுடைய கட்சிக்குள் எவ்வாளவுக்கு ஜனநாயகமும் வெளிப்படைத்தன்மையும் இருக்கின்றது.
ஆகவே இப்படி செயற்பட முடியாது.முதலில் கொள்கை ரீதியில் மக்களுக்கு வழங்கிய ஆணையின் படி நாங்கள் தெழிவாக இருக்க வேண்டும்.

-கட்சி பதிவு செய்யப்பட வேண்டும்.பொதுச்சின்னம் ஒன்றை உருவாக்க வேண்டும்.யாப்பு வேண்டும்.அதன் அடிப்படையிலே நாங்கள் நாங்கள் ஒன்றாக பயணிக்க முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

(12-11-2017)

இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெழிவு படுத்த பகிரங்க விவாதத்திற்கு ஒழுங்கு செய்யுங்கள்-கூட்டமைப்பு தலைமையிடம் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை-(PHOTOS,VIDEO) Reviewed by Author on November 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.