அண்மைய செய்திகள்

recent
-

சூரியனில் மிகப்பெரிய ஓட்டையை கண்டுப்பிடித்த நாசா:


சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதை கண்டுப்பிடித்துள்ள நாசா அது சம்மந்தமான வீடியோவை வெளியிட்டுள்ளது.நாசா வெளியிட்டுள்ள புறஊதா படத்தில், சூரியனின் மேற்பரப்பில் கருப்பாக மிகப்பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஓட்டை வழியாக வேகமாக வெளியேறும் சூரிய காற்று, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக நாசா கூறியுள்ளது.

சூரியனில் ஏற்படும் அகலமான ஓட்டை ‘கரோனா’ என அழைக்கப்படுகிறது. சூரியனின் காந்தபுல இயக்கம் காரணமாக இந்த ஓட்டைகள் ஏற்படுகிறது.வழக்கமான சூரியகாற்றை விட இந்த ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய ஒளிக்கற்றை துகள்கள் அதிவேகமாக வெளியேற்றுகிறது என விண்வெளி வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது.

சூரிய சுழற்சி காரணமாக இன்னும் பல கரோனா ஓட்டைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவும் நாசா தெரிவித்துள்ளது.
சூரியனில் மிகப்பெரிய ஓட்டையை கண்டுப்பிடித்த நாசா: Reviewed by Author on November 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.