அண்மைய செய்திகள்

recent
-

தேர்தல் சத்தம் கேட்கிறது பள்ளி எழுந்தருளுமினே!

மார்கழித் திருவெம்பாவைத் திருநாள் இன்று வைகறைப் பொழுதில் ஆரம்பமாகின்றது.
முன்பெல்லாம் மார்கழித் திருவெம்பாவை என்றால் அதிகாலை மூன்று மணியளவில் முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என எல்லோரும் ஒன்று சேர்ந்து வீதி வழியாகத் திருப்பள்ளி எழுச்சி பாடிய வண்ணம் செல்வார்கள்.

திருப்பள்ளி எழுச்சிப் பாடலும் சங்கு, சேமக் கல வாத்திய ஒலிகளும் கேட்டு துயில் நீங்கிய வர்களும் நீராடி ஆலயம் செல்வர்.
குளிர் நிறைந்த மார்கழி மாதத்தில் வைக றைப் பொழுதில் துயில் எழுவதென்பது மிகக் கடினமான காரியம்.

எனினும் கூத்தபிரானை வணங்குவதற்கு மார்கழி மாதத்து வைகறைப் பொழுது மிகவும் உகந்தது என்பதால் உறக்கம் கலைந்து நீராடி கோயில் சென்று இறைவழிபாடு ஆற்றுவதை நம்மவர்கள் சிரமேற்கொண்டனர்.
ஆனால் இப்போது திருப்பள்ளி எழுச்சி பாடுவதற்கும் வீதி வழி செல்வதற்கும் ஆட்கள் இல்லை என்றாயிற்று.

இறைவழிபாட்டினூடாக மனித சமூகத்தை வழிப்படுத்த நம் முன்னோர்களும் ஞானிகளும் வகுத்த வழிபாட்டு முறைகளும் பண்பாட்டு நெறிகளும் எங்களை விட்டு விலகியபோது, எங்கள் இளம் பிள்ளைகளின் பாதைகளும் வேறாயின.
என்ன செய்வது! நல்லவற்றை இழந்து தீயவற்றை உள்வாங்குவதில் நம் சமூகம் ஆர் வப்படுகிறது.

இதனால் எதிலும் அக்கறையில்லாத் தன்மை வேகமாகப் பரவி வருவதை காண முடியும். முகநூல் தொடர்பும் கையடக்கத் தொலை பேசியின் அதீத பாவனையும் மனிதத்தின் பண்பாட்டு இயல்புகளை பிறழ்வடைய வைத் தன.
இதன் விளைவுகள் மிகப்பெரும் பாதிப்புக் களைத் தரப்போகிறது என்பதற்கு அப்பால், முக்கியமான விடயங்களிலேனும் நாம் கவ னம் செலுத்த வேண்டும் என்பதையாவது நினைவுபடுத்துவது அவசியம் என்ற அடிப் படையில் நாம் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டியுள்ளது.

ஆம், உள்ளூராட்சி சபைத் தேர்தல் வந்து விட்டது. அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு தேர்தல் பிரசார பாடல்களைப் பாடுவது கேட்கி றது.

அவர்கள்  பாடுகிறார்கள். என்ன சொல் கிறார்கள், முன்பு சொல்லியதையே இப் போதும் சொல்கிறார்களா? அல்லது வேறு விதமாகக் கதைக்கிறார்களா? முன்பு சொல்லி யதைச் செய்தார்களா? என்று அறியாமல் குழப்பத்தோடு இருப்பது மிகப்பெரும் ஆபத்து.
ஆகையால், மார்கழித் திருவெம்பாவைப் பாடல்கள் கேட்கின்ற இந்த வைகறைப் பொழு தில் எம் தமிழ் மக்களே பள்ளி எழுங்கள். எங் கள் இனத்தின் விடியலுக்காக நீங்கள் விழித் தெழுங்கள். உங்கள் விழிப்பு இருளை அகற் றட்டும். ஏமாற்றுக் கதைகள் பேசுபவர்களை திருந்த வைக்கும்.
ஆகையால் தமிழ் மக்காள் பள்ளி எழுங் கள். தேர்தல் சத்தம் கேட்கிறது. துள்ளி எழுங்கள்.
valampuri


தேர்தல் சத்தம் கேட்கிறது பள்ளி எழுந்தருளுமினே! Reviewed by Author on December 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.