அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகப் பெரிய படகு விமானம்: வெற்றிகரமாக பறக்க விட்ட சீனா -


உலகின் மிகப் பெரிய படகு விமானத்தை சீனா முதல்முறையாக பறக்கவிட்டது.
சீனாவில் குன்லாங் என்ற அடைமொழியுடன் ஏஜி 600 ரக படகு விமானம் வடிவமைக்கப்பட்டது.
போயிங் 737 ரக விமானத்தின் அளவைக் கொண்டிருக்கும் ஏஜி 600 ரக படகு விமானம், 50 பேருடன் 12 மணி நேரம் வரை வானில் பறந்து செல்லும் திறன் கொண்டது.
இதன் உடல் பகுதியின் நீளம் 39.6 மீற்றரும், இறக்கைகளுடன் இணைந்த குறுக்குவாட்டு நீளம் 38.8 மீற்றரும் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

இந்த விமானம் அந்த நாட்டின் குவாங்டாங் மாகாணம், ஷுஹாய் நகரத்திலுள்ள ஜின்வான் விமான நிலையத்திலிருந்து முதல் முறையாக நேற்று பறக்கவிடப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பறந்த இந்த விமானம் தான் தற்போது தயாரிப்பு நிலையில் உள்ள உலகின் மிகப் பெரிய படகு விமானம்.

இந்த விமானத்தை சீன நிறுவனம் தற்போதைக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் இதை இராணுவத்திலும் பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் 50 பேருடன் 12 மணி நேரம் வரை வானில் பறந்து செல்லும் திறன் கொண்டது, ஒரே நேரத்தில் 4,500 கி.மீற்றர் தூரம் வரை செல்ல முடியும் என்பதால், சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனா ஆக்கிரமித்து வரும் தீவுகள் மற்றும் கடலடித் திட்டுகளில் பயன்படுத்தும் நோக்குடன் இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உலகின் மிகப் பெரிய படகு விமானம்: வெற்றிகரமாக பறக்க விட்ட சீனா - Reviewed by Author on December 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.