அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் ரோஹிங்கியா அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை! -


ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் வசித்து வந்த ரோஹிங்கியா அகதிகள் பலர், மாட்டுக்கறி விவகாரத்தால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக டெல்லிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2013ஆம் ஆண்டு மியான்மரிலிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்த முகமது ரஷித்(34), அசைவ உணவு பழக்கத்திற்காக உள்ளூர் வாசிகளால் மிரட்டப்படடதாகக் கூறுகிறார்.
ஃபரிதாபாத்தில் குப்பைப் சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்த அவர், டெல்லியில் உள்ள ஷஹீன் பாக் என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில், அங்கு வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்.
“சில நாட்களுக்கு முன்பு, அச்சுறுத்தல் காரணமாக எங்களுடன் 14 குடும்பங்கள் இப்பகுதிக்கு (ஷஹீன் பாக்) இடம்பெயர்ந்திருக்கின்றன.
ஃபரிதாப்பாத்தில் வசித்த போது அருகாமையில் இருந்த உள்ளூர் வாசிகள், எங்களை அசைவ உணவு சாப்பிடக் கூடாது, எங்களது விழாக்களை கொண்டாடக்கூடாது என்று மிரட்டினார்கள்.

குழந்தைகளைக் கூட கேவலமாக பேசியிருக்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார் ஹசீனா பேகம் என்ற ரோஹிங்கியா அகதி.
கடந்த பக்ரித் பண்டிகையின் போது எருமை மாடுகளை பலியிடக்கூடாது என ஃபரிதாபாத்தில் இருந்த ரோஹிங்கியா அகதிகள் தாக்கப்பட்டிருந்தனர்.
வட இந்தியாவின் பல இடங்களில் மாட்டுக்கறி பிரச்சினையால் முஸ்லிம் மக்களும், தலித் மக்களும் குறிவைக்கப்பட்டு வருகின்ற சூழலில், ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளும் இப்பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மீண்டும் ஓர் இடப்பெயர்வைச் சந்தித்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் அச்சத்துடனும் வாழ்வாதாரத்தை இழந்த நிலையிலும் தவித்து வருகின்றனர்.
இந்தியாவில் ரோஹிங்கியா அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை! - Reviewed by Author on December 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.