அண்மைய செய்திகள்

recent
-

மார்புக்கு வெளியில் குழந்தையின் இதயம்: பிரித்தானியாவில் நடந்த முதல் ஆச்சரியம் -


பெண் குழந்தை ஒன்று இதயம் வெளியில் இருக்கும் நிலையில் பிறந்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்தவர் டீன் விலின்ஸ் (43). இவர் மனைவி நயோமி பிண்ட்லே (31). நயோமி கர்ப்பமாக இருந்த நிலையில் அவரின் ஒன்பது வார கர்ப்பத்தின் போது மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர்.
அப்போது, அவர் வயிற்றில் இருந்த குழந்தையின் இதயம் வெளிப்பகுதியில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் 22-ஆம் திகதி நயோமிக்கு லியிசெஸ்டர் நகரில் உள்ள கிளின்பீல்ட் மருத்துவமனையில் சிசேரின் மூலம் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.



ஸ்கேனில் தெரிந்தபடி குழந்தையின் இதயம் முழுவதும் உடலின் வெளிப்பகுதியில் இருந்தது.
இது போன்ற நிலையில் பிரித்தானியாவில் பிறந்த குழந்தை எதுவும் உயிர் பிழைக்காத நிலையில் வன்னிலோப் என பெயரிடப்பட்ட இக்குழந்தையை மருத்துவர்கள் சில முக்கிய ஆப்ரேஷன்கள் செய்து உயிர் பிழைக்க வைத்துள்ளார்கள்.
குழந்தையின் இதயம் மார்பின் உள்ளே தற்போது வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நயோமி கூறுகையில், வன்னிலோப்பின் நிலை குறித்து பிரசவத்துக்கு முன்னரே மருத்துவர்கள் கூறியது எனக்கு கவலையளித்தது.
குழந்தை பிறந்த முதல் பத்து நிமிடம் முக்கியமானது என மருத்துவர்கள் கூறிய நிலையில் அவள் பிழைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
பிறக்கும் ஒரு மில்லியன் குழந்தைகளில் 5லிருந்து 8 குழந்தைகள் இதயம் வெளியில் இருக்கும் பிரச்சனை கொண்டு பிறப்பதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது.
மார்புக்கு வெளியில் குழந்தையின் இதயம்: பிரித்தானியாவில் நடந்த முதல் ஆச்சரியம் - Reviewed by Author on December 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.