அண்மைய செய்திகள்

recent
-

கை முழுவதும் மரம்: 16 அறுவை சிகிச்சைக்கு பின்னர் இப்போது எப்படி இருக்கிறார்? -

மர மனிதன் என உலக அளவில் அறியப்படும் வங்கதேசத்து நபருக்கு 16 அறுவை சிகிச்சைக்கு பின்னரும் பட்டை போன்ற மருக்கள் அவரது கைகளில் மீண்டும் வளர்வதாக தெரிவித்துள்ளார்.

ஒரு குழந்தைக்கு தந்தையான 27 வயது அப்துல் பஜந்தர் என்பவரே அந்த மர மனிதர். இவரது கால்கள் மற்றும் கரங்களில் பட்டை போன்ற மருக்கள் தோன்றி இயல்பு வாழக்கையை தலைகீழாக மாற்றியது.
கடந்த ஆண்டு சிறப்பு மருத்துவ குழு ஒன்றினால் இவரது மருக்களை 16 அறுவை சிகிச்சை மூலம் நீக்கம் செய்தனர்.

மொத்தம் அவரது கை கால்களில் இருந்து சுமார் 5 கிலோ வரை மருக்களை நீக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
தமது இயல்பு வாழ்க்கை திரும்பியதாகவும் இனிமேல் தன்னால் தனது குழந்தையை ஆசை தீர தூக்கி கொஞ்ச முடியும் எனவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்திருந்த பஜந்தர், தற்போது தமது கைகளில் மீண்டும் அந்த மருக்கள் வளரத்துவங்கியுள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்துல் பஜந்தர் போன்ற இந்த நிலை உலகில் நான்கு பேருக்கு மட்டுமே இருப்பதாக மருத்துவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் Khulna மாவட்டத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அப்துல், தனது கை கால்களில் பட்டை பட்டையாக மருக்கள் வளர்ந்த பின்னர் சர்வதேச அளவில் அறியப்பட்டார்.
கடந்த ஆண்டு அப்துலுக்கு நடத்தப்பட்ட 16 அறுவை சிகிச்சைக்கு பின்னர், குறித்த நோயில் இருந்து குணமடையும் முதல் நபர் இவரே எனவும், இனி அந்த நோய் இவரை தாக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கை முழுவதும் மரம்: 16 அறுவை சிகிச்சைக்கு பின்னர் இப்போது எப்படி இருக்கிறார்? - Reviewed by Author on January 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.