அண்மைய செய்திகள்

recent
-

7.50000 இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் -


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ‘அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை’ எனும் திட்டத்தால், சுமார் 7,50,000 இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
டொனால்டு டிரம்பின் ‘அமெரிக்க பொருட்களை வாங்குங்கள்; அமெரிக்கர்களை மட்டுமே பணியமர்த்துங்கள்’ என்ற கொள்கையை செயல்படுத்தும் வகையில் அமெரிக்க அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.

அதன்படி, அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினால் H-1B விசா வைத்துள்ள எண்ணற்ற வெளிநாட்டவர்கள் பணியிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு H-1B விசா வழங்கப்படும். இது மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
இந்த விசா வைத்திருப்பவர்களின் பணி, திருப்தியளித்தால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு விசா நீட்டிக்கப்படும்.
H-1B விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களில் இந்தியர்கள் தான் அதிகம். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்கான ‘Green Card'-க்காக விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் திட்ட வரைவு கொள்கை செயல்படுத்தப்பட்டால், H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பிரச்சனை ஏற்படும்.
அதாவது அமெரிக்க அரசு, உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு அனுப்பியுள்ள குறிப்பில், ‘H-1B விசா நீட்டிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விசா நீட்டிப்பு நிறுத்தப்பட்டால், சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் அபாயம் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக அமெரிக்காவிற்கு புதிதாக பணிபுரிய செல்வோர், விசா பெறுவதில் பலத்த சிரமம் ஏற்படும் என தெரிகிறது.
7.50000 இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் - Reviewed by Author on January 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.