அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் முதலாவது தங்க மங்கை... வீராங்கனை S.ஆன் பைரவி

கலைஞனின் அகம் கணணியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக நம்மைக்காண வருகின்றார் சிறந்த விளையாட்டு விராங்கனையும் மன்னார் மாவட்டத்தின் முதலாவது தங்க மங்கை... வீராங்கனை ஆன் பைரவி அவர்களின் அகத்திலிருந்து...  

வரலாற்று சாதனை முதற்தடவையாக வட மாகாண பெண்கள் கிறிக்கெட் அணி இறுதி போட்டிக்கு தகுதி Northern Vs Western. Final போட்டியில்......

  மன்னார் மாவட்டத்தின் முதலாவது தங்க மங்கை... தேசிய கிரிக்கெட் போட்டியில் (6பேர்) வட மாகாணம் சார்பாக விளையாடி தங்க பதக்கத்தை வென்ற மன்னார் மாவட்டத்தில் தாழ்வுபாடு கிராமத்தை சேர்ந்த செல்வி. ஆன் பைரவி

தங்களைப்பற்றி---

மன்னார் மண்ணின் கடல்வளம் மிக்க தாழ்வுபுபாடு கிராமத்தில் திரு திருமதி சந்தியோகு அந்தோனிக்கம் டயஸ் தம்பதிகளின் புதல்வி ஆன் பைரவி பெரேரா எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக விளையாட்டில் எனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றேன்.

விளையாட்டு துறைக்கான வருகை பற்றி
எனக்கு சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் அதிகம் எனது ஆர்வத்திற்கு மென்பந்து கிறிக்கட் விளையாட்டில் தான் முதலில் திறமையை வெளிப்படுத்தினேன் அதற்கு எனது பாடசாலையான மன்.புனித வளனார் றோ.க.த.க பாடசாலையின் ஆசிரியர் திரு.மதிஅழகன் பயிற்சிகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ரீதியில் எனது திறமைக்கு ஊக்கமள்த்தவர் பயிற்றுவிப்பாளர் திரு.றொசான் அவர்களும் வடமாகாணத்தில் சாதிக்க ஊக்கமளித்துக்கொண்டு இருக்கும் தற்போது மன்னார் பிரதேச செயலகத்தில் விளையாட்டு அலுவலகராக பணிபுரியும் திரு.ஜெரோமி அவர்களையும்  நினைவில் கொள்கின்றேன்.

உங்களுக்கு தெரிந்த விளையாட்டுக்கள் பற்றி---
  • கிறிக்கெட் வன்பந்து-CRICKET  HART BALL
  • உதைப்பந்து-FOOT BALL
  • கொக்கி-HOCKEY
  • எல்லே-ELLE
  • சுவட்டு  விளையாட்டு நிகழ்ச்சிகள்.

உங்களின் திறமையின் உச்சமான வெளிப்பாடு என்றால்----
வடமாகாணத்தில் வன்பந்து- (Northern Hardball cricket Caption)கிறிக்கெட்சுற்றுப் போட்டியில் வடமாகாணத்தின் கிறிக்கெட் அணிக்கு தலைவியாக தெரிவாகி  விளையாடி வந்தேன் கடந்த 05 வருடங்களாக 02ம் இடத்தினையே பெற்று வந்தோம் இம்முறையே தேசியரீதியில் எனது தலைமையில் 01ம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கம் சூடினோம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.

முதல் ஓவர் நான் தான் பந்து வீசினேன் அப்போதே தெரியும் எமக்கு தான் வெற்றி என்று  ஒவ்வொரு நிமிடமும் ஒரு பவுணுக்கு நிகராகவே  எண்ணிணோம் அதுவே வெற்றிக்கனியை தந்தது.


உதைபந்தாட்டத்தில் உங்களின் திறமையின் பங்கு பற்றி---
உதைபந்தாட்டம் என்றால் 2011ம் ஆண்டு வடமாகாணத்தில் 1ம் இடத்தினையும் கொக்கி விளையாட்டில் கடந்த 04 ஆண்டுகளாக வடமாகாணத்தில் 2ம் இடத்தினையும் பெற்றுள்ளேன்.

தற்போது விளையாட்டுத்துறைக்கு உங்களின் பணி பற்றி---
மன்னார் மாவட்டத்தின் கிறீடா சக்தியின் HOCKEY  பயிற்றுநராக சேவையாற்றி வருகின்றேன்.

உங்களின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்கள் பற்றி---

எனது பெற்றோர் எனது பயிற்றுநர்களான திரு.மதிஅழகன் திரு.றொசான் திரு.J.ஜெரோமி இவர்களுடன் இன்னும் பலவழிகளில் உதவி புரிந்த நண்பர்கள் அயலவர்கள் ஒவ்வொருவரையும் நன்றியுணர்வுடன் பாராட்டுகின்றேன் விசேடவிதமாக எல்லாம்வல்ல இறைவனின் மகிமையை போற்றுகின்றேன்.

உங்களின் திறமையின் சான்றுகள் பற்றி....



Northern Provincel

  • 2011-Cricket-2nd
  • 2011-Foot Ball-1st
  • 20011-Foot Ball-2nd
  • 2013-Athaltic Meet High Jump -2nd
  • 2014-Cricket-2nd
  • 2016-Cricket-2nd
  • 2016-Hockey-2nd
  • 2016-Foot Ball-2nd
  • 2017-Hockey-2nd
  • 2017-Clours  Awared
  • 2017- Cricket-3rd
  • National meat Cricket 2017-1st
மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் விளையாட்டு வீராங்கனைகளின் நிலை பற்றி----

மன்னார் மவட்டமானது  யாழ்ப்பாண மாவட்டத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது  விளையாட்டுத்துறையில்  இன்னும் முன்னேற்றம்  அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்
 உதைபந்தாட்டம் தவிர்ந்து மற்ற விளையாட்டுக்களின் வளர்ச்சி  என்பது மிகக்குறைவு தான்
கிறிக்கெட்டை எடுத்துக்கொண்டால்  அதிலும் பெண்களின் பங்களிப்பு குறைவாகத்தான் உள்ளது காரணம் பெண் வீராங்கனைகள் பயிற்சிக்கு ஒழுங்காக வருவதில்லை அத்தோடு முறையான பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை இப்படியே இருந்தால் முன்னேற்றம் என்பது துப்பரவாக இருக்காது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தான் கவனமெடுக்கவேண்டும் வீரவீரங்கணைகளும் ஏனையோரும் ஊக்கமளிக வேண்டும்.

விளையாட்டு வீராங்கனைகளிடம் இருக்க வேண்டிய தகுதிகள்  பற்றி
விளையாட்டு வீராங்கனைகளிடம் இருக்க வேண்டிய தகுதிகள்   எனும் போது
  • வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
  • தனியாகவோ குழுவாகவோ விளையாடும் போது முழுமையான திறமையின் பங்களிப்பு வெளிப்படுத்த வேண்டும் வெற்றி என்ற சிந்தனையுடன் தான் விளையாட வேண்டும்.  

உங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்---
என்க்கு பிடித்த விளையாட்டு வீரர்கள் பலர் இருந்தாலும் மிகவும் பிடித்த கிறிக்கட் வீரர் குமார் சங்ககார முன்னாள் கிறிக்கட் வீரர்

விளையாட்டுத்துறையில் உங்கள் கனவு ---
எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிறிக்கட்தான் அதில் எனது திறமையை வெளிப்படுத்தி தேசிய ரீதீயில் தங்கம் எடுத்திருந்த போதும்  தேசிய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் கனவு அது சாத்தியப்படவில்லை தற்போது  இராணுவ உதைபந்தாட்ட அணியில் விளையாட இடம் கிடைத்துள்ளது  அதற்கு தயாராகி வருகின்றேன்.

மன்னார மாவட்த்தின் கலைஞர்களை விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நியூமன்னார் இணையம் பற்றி---
மன்னார் மாவட்டத்தின் கலைஞர்களை விளையாட்டு வீரர்களை என ஒவ்வொருவரையும் வெளிக்கொணரும் உங்களது சேவை பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்.

சந்திப்பு-வை-கஜேந்திரன்-



 










மன்னார் மாவட்டத்தின் முதலாவது தங்க மங்கை... வீராங்கனை S.ஆன் பைரவி Reviewed by Author on January 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.