அண்மைய செய்திகள்

recent
-

அகதிகள் பிரச்சனை பற்றி பேசிய பெண் எம்.பி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் 108 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை


அகதிகள் விவகாரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சுமார் 8 மணி நேரம் பேசி பெண் எம்.பி.சாதனை படைத்துள்ளார்.
நாடாளுமன்ற சிறுபான்மை குழுவின் தலைவரும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பெண் எம்.பியுமான நான்ஸி பெல்லோஸி அடுத்த மாதம் 78 வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்நிலையில் இவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் காலை உள்ளூர் நேரப்படி 10.04-மணிக்கு அகதிகள் விவகாரம் குறித்து பேசினார்.
சுமார் 8 மணி நேரம் 7 நிமிடங்கள் அதாவது மாலை 06.11 மணிக்குத் தான் தன்னுடைய பேச்சை முடித்துள்ளார்.

அதில், நான்ஸி பெல்லோஸி பிற நாடுகளிலிருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வருபவர்களின் பாதுகாப்பது குறித்தும் அதன் அவசியத்தை வலியுறுத்தியும் பேசியதாக கூறப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் 108 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பிரச்சனை குறித்து இவ்வளவு நேரம் பேசிய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 1909-ஆம் ஆண்டு மிஸபிரியைச் சேர்ந்த சாம்ப் கிளார்க் என்பவர் 5 மணி நேரம் 15 நிமிடம் தொடர்ந்து பேசியதுதான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை நான்ஸி பெல்லோஸி தற்போது முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகதிகள் பிரச்சனை பற்றி பேசிய பெண் எம்.பி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் 108 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை Reviewed by Author on February 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.