அண்மைய செய்திகள்

recent
-

இந்த கிராமத்தில் 1 யூரோவுக்கு வீடுகள் விற்பனை -


இத்தாலியில் உள்ள Ollolai கிராமத்தில் வீடு ஒன்று ஒரு யூரோவுக்கு விற்கப்படுகிறது.
Mediterranean பகுதியில் உள்ள Sardinia தீவில் உள்ளது Ollolai கிராமம்.
சொர்க்கம் என்று வர்ணிக்குமளவு அழகான இடம், தூய காற்று, கூழாங்கற்கள் பாவப்பட்ட தெருக்கள், கைவினைப் பொருட்களும் சுவையான உணவும் கொண்ட நாட்டுப்புற மரபுகள் கொண்ட கிராமம்.
50 ஆண்டுகளுக்கு முன் 2250 ஆக இருந்த கிராமத்தின் மக்கள் தொகை இப்போது 1300 ஆகக் குறைந்துவிட்டது.

பல வீடுகள் வெறுமையாகக் கிடக்கின்றன.

எனவே புதிய வீடு வாங்குவோரைக் கவர்வதற்காக Ollolai அரசு 200 வீடுகளை, வீடு ஒன்று €1 ($1.25)என்ற விலையில் விற்க உள்ளது.
ஏற்கனவே 3 வீடுகள் விற்று விட்டன, இன்னும் 100 பேர் வீடுகளை வாங்க முன்வந்துள்ளனர்.
ஆனால் ஒரு கண்டிஷன், வீடு வாங்குபவர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் வீட்டைப் புதுப்பிக்க வேண்டும், இதற்கு சுமார் $25,000 செலவு பிடிக்கும்.
கிராமத்தின் மேயரான Efisio Arbau, எங்கள் பாரம்பரியம் மிகப்பழமையானது, அதை மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம், அதற்காகவே இத்தகைய நடவடிக்கை என்கிறார்.
ஏற்கனவே அமெரிக்காவில் இதே போன்ற முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. Ollolaiயிலும் இது வெற்றி பெறுமா என்பது தெரியாது.
ஆனால் மேயரான Efisio Arbau, எங்கள் பாரம்பரியப் பெருமை வலிமை வாய்ந்தது, எப்போதும் எதையும் தாங்கக்கூடியவர்கள் நாங்கள், எங்கள் கிராமத்தை அழிய விடமாட்டோம் என்கிறார்.
இந்த கிராமத்தில் 1 யூரோவுக்கு வீடுகள் விற்பனை - Reviewed by Author on February 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.