அண்மைய செய்திகள்

recent
-

தனது உண்மையான தந்தையை தெரியாத பிரபலங்கள் -


ஒற்றை ஆளாக, தனது தாயினால் மட்டுமே வளர்க்கப்பட்டு, கடைசி வரையிலும் தனது தந்தை யார் என்றே அறியாமல் இருப்பது கொடுமையான விடயம் ஆகும்.
அவ்வாறான நிலையில் பிறந்து, வளர்ந்த பின்னர் பல துறைகளில் கோலோச்சியவர்கள் சிலர். அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.
மர்லின் மன்றோ
உலக அளவில் கவர்ச்சி நாயகி என்று புகழப்பட்டவர், அமெரிக்க நடிகையான மர்லின் மன்றோ. தனது திருமண முறிவிற்கு பிறகு திரைத்துறையில் கால் பதித்த இவருக்கு, உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டம் இருந்தது.
ஆனால், இவருக்கு தனது உண்மையான தந்தை யார் என்று தெரியாது. எனினும், எட்டி மோர்ட்டன்சென் என்பவர், இவரது தந்தை என்று கூறப்படுகிறார்.

ஜாக் நிக்கல்சன்
அமெரிக்க திரையுலகில், சுமார் 60 ஆண்டு காலமாக சிறந்த நடிகராகவும், இயக்குநராகவும் திகழ்பவர் ஜாக் நிக்கல்சன். இவருக்கும் தனது தந்தை யார் என்று தெரியாது. ஜாக் நிக்கல்சனை அவரின் தாத்தா, பாட்டி தான் வளர்த்தனர்.
மேலும், இவர் தனது பதின் வயதில், தனது சகோதரி தான் தனது தாய், என்பதையே அறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் குழந்தையாக இருக்கும் போதே தத்தெடுக்கப்பட்டதால், தனது உண்மையான தந்தை யார் என்பதை இவரால் கடைசி வரையிலும் அறிந்து கொள்ள முடியவில்லை.

ஜெஃப் பெஸோஸ்
பிரபல ஒன்லைன் நிறுவனமான அமேசானின் நிறுவனரான ஜெஃப் பெஸோஸ், உலகின் மபெரும் ஒன்லைன் இ-காமர்ஸ் இணையத்தின் உரிமையாளரும் ஆவார். ஆனால், இவருக்கு தனது தந்தையை யார் என்று தெரியாது.

50 செண்ட்
‘50 செண்ட்’ என்று அழைக்கப்படும் கர்டீஸ் ஜேம்ஸ் ஜேக்ஸன், பிரபல ஆங்கில பாடகர் ஆவார். தனது தாயினால் ஆரம்பத்தில் இவர் வளர்க்கப்பட்டார். அதன் பின்னர், இவரின் தாத்தா, பாட்டி தான் வளர்த்தனர். இவருக்கும் தனது தந்தையை தெரியாது.

அட்ரியன் கிரெனியர்
அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டவர் அட்ரியன் கிரெனியர். இவர், வளரும் போது 18 ஆண்டுகளாக தனது தந்தை யாரென்றே தெரியாமல், அவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

எரிக் கிளாப்டன்
இங்கிலாந்தைச் சேர்ந்த ராக் இசைக் கலைஞர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் எரிக் கிளாப்டன். இவர், தனது வாழ்நாளில் தன் உண்மையான தந்தையை நேரில் பார்த்ததில்லை. இவரின் தந்தை, 1985ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.
அதன் பின்னர், தனது தந்தை குறித்த தன்னுடைய எண்ணங்கள் மற்றும் அவர் கடந்து வந்த பாதை குறித்தும் ‘My Father Eye's' எனும் பாடலை எழுதியுள்ளார். மேலும், இவர் கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பாஃடா விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லிவ் டைலர்
அமெரிக்க நடிகை மற்றும் மொடலான லிவ் டைலரின் பிறப்பு சான்றிதழில், டாட் ரண்ட்ரென் என்பவர் தான் இவரின் தந்தை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஏரோ ஸ்மித் எனும் பிரபல பாடகர் குழுவில் இருந்து, டைலர் பெகன் என்பவரே தனது நிஜமான தந்தை என்பதை, சுமார் 10 ஆண்டுகள் கழித்து தெரிந்து கொண்டார்.

டேவ் தாமஸ்
டேவ் தாமஸ் என்பவர் பிரித்தானியாவைச் சேர்ந்த Programmer ஆவார். மேலும், நிறைய புத்தகங்களும் எழுதியுள்ள இவர், பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திற்கு பிரிந்து சென்றுள்ளார்.
இவர் சிறு குழந்தையாக இருந்த போதே தத்தெடுக்கப்பட்டதால், இவரின் உண்மையான பெற்றோரை இவர் கண்டதில்லை.

லூயிஸ் ஃபரகான்
அமெரிக்காவைச் சேர்ந்த மதவாத தலைவர் லூயிஸ் ஃபரகான். இவர், ஆப்ரிக்கன் - அமெரிக்க ஆர்வலரும் ஆவார். இவர் ஒருமுறை, தனது உண்மையான தந்தையை இதுவரை கண்டதில்லை என்று கூறியிருந்தார்.

A
தனது உண்மையான தந்தையை தெரியாத பிரபலங்கள் - Reviewed by Author on February 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.