அண்மைய செய்திகள்

recent
-

அரசியல் சுற்றுப்பயண விவரங்களை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்! -


பிப்ரவரி 21-ஆம் திகதி அன்று தான் மேற்கொள்ளவிருக்கும் அரசியல் சுற்றுப்பயண விவரங்களை நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படி, வரும் 21-ஆம் திகதியன்று இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வாழ்ந்த ராமேஷ்வரம் இல்லத்தில் இருந்து கமலின் பயணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அன்று தான் மேற்கொள்ளவிருக்கும் முழு பயணம் குறித்த விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

பயண விவரங்கள்:
காலை 7.45 மணி : அப்துல் கலாமின் இல்லத்துக்கு வருகிறார்.
காலை 8.15 மணி : அப்துல் கலாம் படித்த பள்ளிக்குச் செல்கிறார்.
காலை 8.50 மணி : கணேஷ் மஹாலில் மீனவர்களைச் சந்திக்க இருக்கிறார்
காலை 11.10 மணி : அப்துல் கலாமின் நினைவிடத்துக்குச் செல்கிறார்.
காலை 11.20 மணி : நினைவில்லத்தில் இருந்து மதுரைக்குப் புறப்படுகிறார்.
நண்பகல் 12.30 மணி : ராமநாதபுரம் அரண்மனை நுழைவுவாயிலில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பிற்பகல் 2.30 மணி : பரமக்குடி ஐந்துமுனை சாலையில் லேனா மஹாலின் முன் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
பிறபகல் 3.00 மணி : மானாமதுரை ஶ்ரீபிரியா தியேட்டருக்கு அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்.
மாலை 5 மணி : மதுரையில் உள்ள ஒத்தைக்கடை மைதானத்துக்கு வருகிறார்.
மாலை 6 மணி : தான் அறிவிக்கவிருக்கும் அரசியல் கட்சியின் கொடியை ஏற்றுகிறார்.
மாலை 6.30 மணி : பொதுக்கூட்டம் தொடங்குகிறது.
இரவு 8.10 முதல் 9 மணி வரை : தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி உரையாற்றுகிறார்.

அரசியல் சுற்றுப்பயண விவரங்களை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்! - Reviewed by Author on February 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.