அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்களின் பட்டியல் வெளியானது -


உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துப்பாக்கி சூடு என தினசரி வாழ்க்கையாகிப் போன 50 மிக மோசமான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியலில் தென் மற்றும் மத்திய அமெரிக்கா முன்னணியில் இருந்தாலும் ஐக்கிய அமெரிக்க மாகாணங்களும் தென் ஆப்பிரிக்காவும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உலகில் போதை மருந்துக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் மெக்சிகோவின் லாஸ் கேபோஸ் நகரம் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
வெனிசுலாவின் கராகஸ் நகரம் உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மெக்ஸிகோவின் துறைமுக நகரமான அகாபுல்கோ 3-வது இடத்திலும், பிரேசிலின் நடால் நகரம் 4-வது இடத்திலும், மெக்சிகோவின் டிஜுவானா நகரம் 5-வது இடத்திலும் உள்ளது.
2017 ஆம் ஆண்டு அதிக குற்றச்செயல்கள் நடந்த நகரங்களில் மெக்சிகோவின் 12 நகரங்கள் முன்னிலையில் உள்ளன.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 205 கொலைக்குற்றங்கள் நடந்துள்ளன.
மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் செயின்ட் லூயிஸ் நகரம் 13-வது இடத்தில் உள்ளன.

ஆபத்தான முதல் 10 நகரங்களின் பட்டியல்:
  1. Los Cabos, Mexico
  2. Caracas, Venezuela
  3. Acapulco, Mexico
  4. Natal, Brazil
  5. Tijuana, Mexico
  6. La Paz, Mexico
  7. Fortaleza, Brazil
  8. Victoria, Mexico
  9. Guayana, Brazil
  10. Belém, Brazil
ஆனால், ஐரோப்பிய, ஆசிய, அவுஸ்திரேலிய அல்லது கனேடிய நகரங்கள் எதுவும் குறித்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்களின் பட்டியல் வெளியானது - Reviewed by Author on March 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.