அண்மைய செய்திகள்

recent
-

எங்கள் ஹிரோ´மாவுக்கு ஜனாதிபதி மைத்திரி அஞ்சலிக்காதது ஏன்?




இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யப்பானுக்குச் சென்றிருந்த அவர் இரண் டாம் உலக யுத்தத்தின்போது அணு குண்டு வீசப் பட்டு அழிக்கப்பட்ட யப்பானின் ஹிரோ´மா நகருக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார்.

பொதுவில் யப்பானுக்கு விஜயம் செய்யும் உலக நாட்டுத் தலைவர்களும் வெளிநாட்டுப் பிரமுகர்களும் அணுகுண்டு வீச்சில் அழிவுற்ற நாகசாகி, ஹிரோ´மா ஆகிய நகரங்களுக் குச் சென்று அங்குள்ள நினைவிடத்தில் அஞ் சலி செலுத்துவது வழக்கம்.
மனித அழிவின் அடையாளமாக இருக்கக் கூடிய மேற்குறித்த யப்பானின் இரு நகரங் களும் இன்றுவரை மனித இதயத்தைக் கசக் கிப் பிழிய வைப்பன.

அந்த இடத்துக்குச் செல்கின்ற எவரும் அங்கு ஏற்பட்ட அழிவுகளின் அடையாளங்களைப் பார்த்து நெக்குருகுவர். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விதிவிலக்கல்ல.
ஹிரோ´மாவில் உள்ள நினைவுத் தூபி யில் அஞ்சலித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன சில நிமிடங்கள் இதயத்தால் அழுதார். இதேநிலைதான் அங்கு செல்லும் அத்தனை பேருக்கும் ஏற்படும்.

சிலவேளை இந்த உலகில் யுத்தம் நிகழா மல், மனித உயிர்கள் வதைபடாமல் இருப்ப தற்கு யப்பானின் ஹிரோ´மா, நாகசாகி ஆகிய நகரங்களில் ஏற்பட்ட அழிவுகள்தான் காரணமாக இருக்கலாம்.
சிலவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ வன்னி யுத்தத்துக்கு முன்னதாக யப்பானுக்கு சென்று ஹிரோ´மா, நாகசாகி  ஆகிய நகரங்களைப் பார்த்திருந்தால், வன்னி யில் கொடும் போர் செய்வதை விரும்பாதிருப் பாரோ என்று நம் ஏழை மனம் நினைக்கிறது.

எதுவாயினும் எங்கள் வன்னியும் ஒரு ஹிரோ´மா என்பதுதான் உண்மை.
அணுகுண்டு தரவல்ல அழிவுகளை; மனித உயிர்க்கொலைகள்; இன அழிப்பை வன்னி பெருநிலப்பரப்பும் சந்தித்தது.
இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல் லப்பட்டனர்.

யப்பான் எங்ஙனம் ஹிரோ´மாவில் உயிரி ழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் நிறுவி யுள்ளதோ அதுபோல தமிழ் மக்கள் வன்னி யுத்தத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க் காலை அஞ்சலிக்கின்றனர்.
ஆக, நம் கேள்வியயல்லாம் யப்பானுக்கு விஜயம் செய்த எங்கள் நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஹிரோ´மாவுக்குச் சென்று அங்குள்ள நினைவுத் தூபிக்கு அஞ் சலி செலுத்தினார் எனும்போது,

அவர் முள்ளிவாய்க்காலுக்குச் சென்று வன்னி யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவித் தமிழ் மக்களுக்காக ஒரு நிமிடமேனும் அஞ்சலி செலுத்தாதது ஏன்?
ஆம், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர் கள் தமிழர்கள் அல்லவா? அதனால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முள்ளிவாய்க் காலுக்குச் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.

கடவுளே! இரக்கப்படுவதிலும் உயிரிழந்தவர் யார் என்று எட்டிப்பார்க்கும் கொடுமை இருக் கும்வரை மனிதம் வாழ்வது கடினமே.

எங்கள் ஹிரோ´மாவுக்கு ஜனாதிபதி மைத்திரி அஞ்சலிக்காதது ஏன்? Reviewed by Author on March 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.