அண்மைய செய்திகள்

recent
-

கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற வீரர்கள் -


பரபரப்பான தருணங்களில் சிக்ஸர் அடித்து தங்கள் அணியை வெற்றி பெற வைத்தவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
1986-ம் ஆண்டு அவுஸ்திரேலிய-ஆசிய கிண்ணம் கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.

இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிபோட்டியில் மோதிக் கொண்டது. கடைசி பந்தில் 4 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. சேட்டன் சர்மா பந்தில் ஜாவிட மியாண்டட் சிக்ஸர் அடிக்க, பாகிஸ்தான் வெற்றியை பதிவு செய்தது.

2008ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டி குயின்ஸ் பூங்கா ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
கடைசி பந்தில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இலங்கையின் சமிந்தா வாஸ் பந்தை சிக்ஸருக்கு விரட்டி தன்னுடைய அணிக்கு வெற்றிக்கனியை ஈட்டி தந்தார் சிவ்நாராயண் சந்தர்பால்.
2013ம் ஆண்டு இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில்,
கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அதனை சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் மெக்கல்லம்.
1999-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கடைசி பந்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
நாஷ் வீசிய பந்தை சிக்ஸராக மாற்றி தனது அணியை வெற்றி பெற வைத்தார் லான்ஸ் குளூஸ்னர்.

2006-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் பிரண்டன் டெய்லர்.
2010-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் இலங்கையின் சமர கபுகேதாரா கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
2012-ஆம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான டி20 போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தார் இயான் மோர்கன்.
2013-ஆம் ஆண்டு பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவுகள் இடையே நடந்த போட்டியில் ஓவரின் ஆறாவது மற்றும் இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை தேடித்தந்தார் பாகிஸ்தானின் பாபர்.
2014-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான சிக்ஸரை அடித்தவர் ஜிம்பாப்வே அணியின் சிபாண்டா.
கடந்த 18-ஆம் திகதி நடந்த நிதாகஸ் கிண்ணம் இறுதி ஆட்டத்தின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் விளாசிய சிக்ஸர் இந்தியாவுக்கு ஆட்டத்தில் வெற்றியையும், கிண்ணத்தையும் பெற்றுத்தந்தது.

கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்ற வீரர்கள் - Reviewed by Author on March 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.