அண்மைய செய்திகள்

recent
-

உலகில் அதிக நேரம் பயணம் செய்யகூடிய விமானங்களின் பட்டியல் -


அவுஸ்திரேலியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு 17 மணி நேரத்தில் க்வண்டாஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று பயணித்து வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், உலகில் அதிக நேரம் பயணம் செய்யக் கூடிய விமானங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

குறித்த பட்டியலின் 10-வது இடத்தில் ஜெட்டா - லஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை இணைக்கும் ஏர்லைன் சவுதியா உள்ளது.
குறித்த விமானமானது சுமார் 13,380 கி.மீ தொலைவு பயணம் செய்கிறது. பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள இந்த விமானத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
9-வது இடத்தில் துபாய் - லாஸ் ஏஞ்சல்ஸ்
ரிவல் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் துபாய் - லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே இந்த சேவையை வழங்குகிறது. இந்த விமானமானது சுமார் 13,390 கி.மீ., தூரம் பயணம் செய்கிறது.
8-வது இடத்தில் அபுதாபி - லாஸ் ஏஞ்சல்ஸ்
எதிஹாத் நிறுவனத்தின் விமானம் அபுதாபில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை சுமார் 13,470 கி.மீ., தூரம் பயணம் செய்கிறது.

7-வது இடத்தில் ஜோனர்ஸ்பெர்க் - அட்லாண்டா
ஜோனர்ஸ் பெர்க் நகரில் இருந்து ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் விமானத்தை இயக்குகிறது. இது சுமார் 13,500 கி.மீ வரை பயணம் செய்கிறது.
6-வது இடத்தில் சான் பிரான்சிஸ்கோ - சிங்கப்பூர்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைட்டெட் இந்தியா ஆகிய நிறுவனங்கள் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடியாக விமானங்களை இயக்குகின்றன. இது சுமார் 13,600 கி.மீ., வரை பயணம் செய்கிறது.
5-வது இடத்தில் ஹாஸ்டான் - ஆஸ்திரேலியா
யுனைட்டெட் நிறுவனத்தின் 787 ரக விமானம் அமெரிக்காவின் தென் பகுதியான ஹாஸ்டானில் இருந்து 13,800 கி.மீ., பயணம் செய்கிறது. இது சுமார் 17.30 மணி நேரம் பயணம் செய்து இலக்கை அடைகிறது.
4-வது இடத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் - சிங்கப்பூர்
யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடியாக விமானத்தை இயக்குகிறது. இந்த விமானம் 14,100 கி.மீ தூரம் பயணம் செய்கிறது.

3-வது இடத்தில் ஆக்லாந்து - துபாய்
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் இருந்து துபாய் வரை பயணிக்கும் ஏமிரேட்ஸ் ஏர்லைன் விமானம் சுமார் 17.30 மணி நேர பயணத்தில் 14,200 கி.மீ. வரை கடக்கிறது.
2-வது இடத்தில் பெர்த்த் - லண்டன்
கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து லண்டனுக்கு நேரடியாக விமானங்களை இயக்க துவங்கியுள்ளது.
இது சுமார் 18 மணி நேரத்தில் 14,500 கி.மீ., வரை பயணம் செய்து இலக்கை அடைகிறது.
முதலிடத்தில் டெல்லி - சான் பிரான்சிஸ்கோ டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு இயக்கப்படும் விமானம் தான் உலகிலேயே அதிக தூரம் பயணம் செய்யும் விமானமாக கருதப்படுகிறது.
இந்த விமானம் சுமார் 16,980 கி.மீ.தூரம் பயணம் செய்கிறது.
உலகில் அதிக நேரம் பயணம் செய்யகூடிய விமானங்களின் பட்டியல் - Reviewed by Author on March 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.